Shanthi Nilava Vendum
4.5/5
()
About this ebook
Reviews for Shanthi Nilava Vendum
3 ratings0 reviews
Book preview
Shanthi Nilava Vendum - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
சாந்தி நிலவ வேண்டும்
Shanthi Nilava Vendum
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
சாந்தி நிலவ வேண்டும்
1
வலது காலை எடுத்து உள்ளே வரும்போதே, முகத்தைத் திருப்பிக்கொண்ட மாமியார், முறைத்துப் பார்த்த ஒர்ப்படிகள்... விசாலத்திற்கு வியர்த்தது படபடப்பை மறைத்துக்கொண்டு அருகிலிருந்த புருஷனை மெல்ல பார்த்தாள். போகப் போக சரியாய்டும் தைரியமாயிரு என்று கண்களாலேயே அவளுக்கு தைரியம் சொன்னான் மூர்த்தி.
ஒரு ஆரத்திசுட இல்லாமல் புகுந்த வீட்டில் கிரகப் பிரவேசம் செய்தாள். உள்ளே வந்த சில கணங்களிலேயே கண்ணைக் கட்டிவிடப்பட்டதுபோல் உணர்ந்தாள். எங்சே நிற்பது என்ன செய்வது...எதுவும் புரியவில்லை. பத்ய வியூகத்திற்குள் நுழைந்து போரிட்ட அபிமன்யுவின் நினைவு தான் தோன்றியது. வஞ்சகத்தில் அந்த வீரன் மாண்டு போனான். தன் முடிவு என்னவாகப் போகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. வியூகத்தினுள் எத்தனை நாழி புருஷன் கேட்யமாய் காக்கப் போகிறான்? தெரியவில்லை
"என்னம்மா பயம்மார்க்கா?’’ காதருகில் புருஷனின் கரல் கேட்டது.
ஆமா...என்ன செய்யறதுன்னு தெரியலையே உள்ளே வந்தாச்சு. யாருக்கும் பிடிக்காத சூழ்நிலையில எப்படி நடந்துக்கறதுன்னு தெரியலையே.
சகஜமாயிரு!
சொல்றது சுலபம்.
இந்த பதில் கேட்டு மூர்த்தி மெல்ல சிரித்தான்" அவளருகில் வந்து அவள் தோள் பற்றி உற்றுப் பார்த்தான். ‘'நீ பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணாகணும் அன்பைக் கொடுத்து