Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramanakathe
Ramanakathe
Ramanakathe
Ebook209 pages2 hours

Ramanakathe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Born and educated in erstwhile Madras, Smt.Vijayalakshmi has to her credit many stories and articles published in Tamil magazines. Her illustrated retelling of Valmiki Ramayana titled “ Raman Kadai” published by the prestigious Kalaimagal Kaariyaalayam, with a foreword by Sri Chandrasekara Saraswathi , Shankaracharya of Kanchi , was well received not only in Tamil Nadu but in Srilanka and other places as well. This was later published as ‘Ramana Kathe ‘in Kannada as well. Her travelogue covering South India , in Tamil received encouragement from Sri.Rajaji and other eminent Tamil writers. Moving to Mysore upon marriage, she taught herself Kannada and started translating her Tamil works. “ Aa Rahasya Haagoo Itara Kathegalu” a compendium of delightful short stories with moral lessons for children , was written in Kannada and it received the Karnataka Rajyotsava award for children’s literature in 1970 at Mysore. Being a trained artist ,Smt .Vijayalakshmi has illustrated all her stories herself. ‘ Keliri Nanna Katheya’ a story providing infotainment is another Kannada creation that brought her popularity. Vijayalakshmi , now an octogenarian currently lives with her sons at Mysore.
LanguageUnknown
Release dateJun 18, 2016
ISBN6580103500844
Ramanakathe

Reviews for Ramanakathe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramanakathe - C.S.Vijayalakshmi

    http://www.pustaka.co.in

    ராமன் கதை

    Raman Kadhai

    Author:

    சி.எஸ்.விஜயலட்சுமி

    C.S.Vijayalakshmi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/cs-vijayalakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பாலகாண்டம்

    2. அயோத்தியா காண்டம்

    3. ஆரண்ய காண்டம்

    4. கிஷ்கிந்தா காண்டம்

    5. சுந்தர காண்டம்

    6. யுத்த காண்டம்

    7. உத்தர காண்டம்

    1

    பாலகாண்டம்

    ராமாயணத் தோற்றம்

    வால்மீகிமுனிவர் ஒரு சமயம் மூன்று உலகமும் சென்று உலவிவரும் நாரதரைக் கண்டார். முனிவர்களில் சிறந்தவரே, வீரம் தர்மம் சத்தியம் கொள்கையைக் கடைப்பிடிப்பது, ஒழுக்கம் ஜீவகாருண்யம் அறிவு சாந்தம் இந்தக் குணங்கள் நிறைந்து மேன்மையுற்றிருக்கும் மனிதன் யாரேனும் இருக்கிறானா? என்று கேட்டார். நாரதர் இந்த மாதிரிக் குணங்கள் உள்ள மனிதன் இருக்கிறான் என்றார். அப்படிச் சுருக்கமாக ஸ்ரீராம சரித்திரத்தைக் கூறினார்.

    கதையைக் கேட்டு வால்மீகி முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு தமஸா நதியில் அவர் நீராடப் போன சமயம் இரண்டு அன்றில் பறவைகள் ஒரு மரத்தில் விளையாடுவதைக் கண்டு களித்தார். அப்போது ஒரு வேடன் அவற்றில் ஆண் பறவையை அம்பு எய்து கொன்றான். இதைக் கண்டு கோபம் கொண்ட வால்மீகி முனிவர் தம்மை அறியாமலே அந்த வேடனை நான்கு பாதங்கள் அடங்கிய ஒரு சுலோகம் கூறிச் சபித்தார். பிறகுதான் அந்தச் சுலோகம் எதுகை மோனையுடன் அமைந்திருப்பதை அவரே தெரிந்துகொண்டார். அந்தச் சுலோகத்திலேயே ஈடுபட்டு அவர் தம் ஆசிரமத்தை அடைந்தார். அங்கே பிரம்மா அவர் முன் தோன்றி நடந்தது நடந்தபடியே ஸ்ரீ ராம சரிதம் உன் கண்முன் தோன்றும். நீ வேடனைச் சபித்த அந்தச் சுலோகத்தையே முதலாகக் கொண்டு ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாடு. என் அருளால் சரஸ்வதி உன்னிடம் பிரசன்னமாயிருக்கிறள். உலகம் உள்ளமட்டும் ஸ்ரீமத் ராமயணம் அழியாது. ஆகவே உன் புகழும் அழியாது என்று சொல்லி மறைந்தார். அப்படியே ராமாயணம் முழுதும் வால்மீகி முனிவரின் கண் முன் கடப்பதுபோல் தெரிந்தது. முனிவரும் சிறந்த நடையுள்ள செய்யுள்களால் ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாடினார்.

    பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்று ஏழு பாகங்களாக அதை வகுத்துப் பாடினார். அதில் இருபத்துநாலாயிரம் சுலோகங்கள் இருக்கின்றன ஐந்நூறு அத்தியாயம் கொண்டது அது.

    வால்மீகி முனிவர் தம் ஆசிரமத்தில் வளர்ந்த குச லவர்களுக்கு ராகத்துடன் ஸ்ரீ ராமாயணம் பாடக் கற்றுக்கொடுத்தார். வீணையுடன் அவர்கள் பாடுவதைக் கேட்ட எல்லாரும் மெய்யுருகிக் குழந்தைகளை ஆசீர்வதித்தார்கள். ஒரு சமயம் அயோத்தி மாநகர வீதியில் இந்தக் குழந்தைகள் ஸ்ரீ ராமயணத்தைப் பாடிச் சென்றர்கள். ஸ்ரீ ராமர் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவர்களை அரண்மனைக்குள் அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்டார். அவர்களும் பாடினார்கள்.

    ராமாவதாரம்

    வைவஸ்வத மநு என்பவர் மிகப் பழைய காலத்தில் இருந்தார். அவரே அரசர்களுடைய வம்சத்துக்கு முதல் தந்தை. அந்த வம்சத்தில் தோன்றிய சகரன் என்ற அரசன் உலகில் சமுத்திரத்தை வெட்டச் செய்தான். அதனால் அதற்குச் சாகரம் என்ற பெயர் வந்தது. அந்த வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மிகவும் பிரசித்திபெற்றவர். இந்த இக்ஷவாகு வம்சத்திலேதான் ஸ்ரீராமர் தோன்றினர்.

    மநு நிர்மாணம் செய்த அயோத்தி யென்னும் பெரிய நகரம் சரயு நதிக் கரையிலுள்ள கோசலநாட்டின் தலைநகர். பன்னிரண்டு யோஜனை நீளமும் மூன்று யோஜனை அகலமும் கொண்டது செல்வமும் சிறப்பும் நிறைந்த ஊர் அது. பெரிய கோட்டைகள், சுற்றிலும் அகழிகள், எங்கும் ஆயுத யந்திரங்கள் கடைகள், சிற்பிகள், நாட்டியக்காரர்கள், பாடகர்கள், நாடகம் ஆடுகிறவர்கள், அரசரைப் பள்ளியெழுப்பும் பாணர்கள், சூதர்கள், பூங்காக்கள், தோப்புகள், குதிரை, யானை, ஒட்டகம், கோவேறு கழுதை, பசு, இவைகளின் கூட்டங்கள் எல்லாம் அயோத்தியில் நிரம்பியிருந்தன. தனதானியங்கள் நிறைந்திருந்தன. ஜனங்கள் குறைவின்றி மகிழ்ச்சியோடு இருந்தார்கள். அவர்கள் தைரியமும் பலமும் உள்ளவர்கள். அற நெறிப்படி நடப்பவர்கள். இவ்வாறு இருந்த அயோத்தியில் தசரத சக்கரவர்த்தி ஆண்டுவந்தார். தசரதர் எல்லாச் சாஸ்திரமும் உணர்ந்தவர் மாகவீரர். பாகலீகம், காம்போஜம் முதலிய இடங்களிலிருந்து சிந்துப் பிரதேசத்திலிருந்தும் ஏராளமான குதிரைகளை அவர் வரவழைத்திருந்தார். ஹிமயலைப் பிரதேசத்திலிருந்து உயர்ந்த யானைகளை வரவழைத்திருந்தார்.

    தசரதரிடம் சிறந்த குணமும் புத்தியுமுள்ள எட்டு மந்திரிகள் இருந்தார்கள். அவர்கள் நாட்டுக்காவும் அரசனுக்காவும் தங்களுடைய உயிரைக் கூடக் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள்: சுயநலம் இல்லாதவர்கள்: சமயம் அறிந்து காரியம் செய்யவர்கள். திருஷ்டி, ஐயந்தர், விஜயர், சித்தார்த்தர், அர்த்த சாதகர், அசோகர், மந்திரபாலர், சுமந்திரர் என்பன அவர்கள் பெயர்.

    இவர்களைத் தவிரப் பெருந் தபஸ்விகளான குருமார்களும் இருந்தார்கள். எல்லாருடனும் தசரதர் கலந்தாலோசித்து நாடு செழிக்கும்படி ஆண்டார். இவ்வளவெல்லாம் இருந்தும் தமக்குப் புதல்வர்கள் இல்லையே என்ற குறை இருந்தது. அதனால் குருமாருடன் கலந்தாலோசித்துப் புதல்வர்கள் பிறக்கப் புத்திர காமேஷ்டி யாகம் செய்யலாம் என்று முடிவு செய்தார். சரயுநதியின் வடகரையில் யாகசாலையைக் கட்டச் சொன்னர். யாகத்துக்கு வரும் அரசர்கள் தங்குவதற்காக மாளிகைகள் பிரம்மணர் முதலிய அனைவருக்கும் அவரவருக்குத் தக்கபடி இடங்கள் எல்லாருக்கும் வேண்டிய உணவு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யச் சொன்னர்.

    சுமந்திரர் தசரதரிடம் மகாராஜா புத்திரகாமேஷ்டி யாகம் பற்றி முன்பே சநத்குமார முனிவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் மூன்று காலமும் அறிந்தவர். அவர் சொன்ன விவரம் இது என்று பின்வருமாறு சொன்னர்.

    காசியப மகரிஷியின் குமாரர் விபண்டகர். அவருடைய குமாரர் ரிசிய சிருங்கர். ரிசியசிருங்கர் தம் தந்தைக்குப் பணிபுரிவதிலேயே காலம் தள்ளிவந்தர். பெரிய தபஸ்வி. அங்கதேச மன்னனான ரோமபாதன் ஒரு சமயம் ஏதோ தவறு இழைத்ததால் அவன் நாட்டில் மழையின்றிப் பஞ்சம் நேர்ந்தது. அரசன் மனம் நொந்து புரோகிதர்களை அழைத்து பஞ்சத்தைப் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவர்கள் ‘ரிசியசிருங்கரை அழைத்து வந்தால் மழை பெய்யும்’ என்றர்கள். அரசன் தூதர்களை விட்டு ரிசியசிருங்கரை அழைத்து வரும்படி சொன்னான். ஆனால் விபகண்டகரின் முன்கோபத்தை எண்ணி அவர்கள் பயந்தார்கள். கடைசியில் விபகண்டகர் அறியாதபடி தந்திரமாக ரிசியசிருங்கரை அங்கதேசத்துக்கு அழைத்து வந்தார்கள். மழையும் பெய்து பஞ்சமும் நீங்கியது. பிறகு ரோமபாதர் விபண்டகனிடம் விஷயத்தைச் சொல்லி மன்னிப்புப் பெற்றர். தம் மகள் சாந்தையை ரிசியசிருங்கருக்கு மணம் முடித்து வைத்தார். அந்த ரிசியசிருங்கரே தசரத மகாராஜரின் புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்து வைப்பார் என்று முன்பே சநத்குமாரர் சொல்லியிருக்கிறர். ஆகவே ரிசியசிருங்கரை முக்கிய குருவாக வைத்து யாகத்தை நடத்தவேண்டும் என்றார்.

    உடனே தசரதர் தம் மனைவிமார் மந்திரிகள் பரிவாரத்தினர் எல்லாருடனும் அங்கதேசம் போய் அந்த அரசனிடம் உம்முடைய மருமகனையும் மகளையும் நான் செய்யும் புத்திரகாமேஷ்டி யாகத்துக்கு என்னுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரோமபாதரும் மகிழ்ச்சியோடு அவர்களை அனுப்பிவைத்தார். ரிசியசிருங்கரையும் சாந்தையையும் அயோத்தி மக்கள் கோலாகலமாக வரவேற்றர்கள்.

    யாகத்துக்கு வேண்டிய எல்லாம் தயாராயின. யாகக் குதிரை ஒரு வருஷகாலம் பூமியைச் சுற்றி இடையூறு எதுவும் இல்லாமல் திரும்பிவந்தது: முறைப்படி யாகம் நடந்தது. யாகத்துக்கு வில்வம், கருங்காலி, நிறுவிலி, தேவதாரு முதலிய மரங்களால் செய்த எட்டுப் பட்டை கொண்ட இருபத்தொரு ஸ்தூபங்களைச் சிற்பிகள் நட்டிருந்தார்கள். ஒவ்வொன்றும் ஐந்நூற்று நான்கு அங்குல உயரம் இருந்தது. எல்லாவிதமான அலங்காரங்களுடனும் அவைகள் விளங்கின. வஞ்சிமரத்தால் செய்த கரண்டியால் ஹோமம் செய்தார்கள். யாகத்தைக் காண வந்த ஜனங்களுக்கு எல்லா வசதிகளும் இருந்தன் இப்படிப் பலவகை உபசரிப்பும் பெற்று அவர்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டார்கள். யாகத்தைக் காண யார் கண்ணிலும் படாமல் தேவர்களும் ஆகாயத்தில் கூடினர்கள். அவர்கள் பிரம்மாவிடம் ராவணன் உம்மிடம் வரம் பெற்றதால் கர்வங்கொண்டு எங்களை மிகவும் துன்புறுத்துகிறன். அவன் தேவர், கந்தர்வர், யக்ஷர், அசுரர் இவர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாதென வரம் பெற்றிருக்கிறானே! எங்கள் துன்பம் தீர்க்க வழி செய்யும் என வேண்டினர்கள்.

    பிரம்மா அவன் மனிதர்களை மதிக்காமல் அவர்களால் தனக்கு என்ன வந்துவிடும் என்று இறுமாந்து ‘அவர்களால் மரணம் ஏற்படக்கூடாது’ என்று வரம் கேட்க மறந்துவிட்டான். ஆகவே மனிதனாலேதான் அவனைக் கொல்ல வழி தேடவேண்டும் என்றர்.

    அப்போது மகாவிஷ்ணு அங்கே வரவே பிரம்மா அவரிடம் விஷயத்தைச் சொன்னார்: பகவானே நீர் பூலோகத்தில் மனிதராகத் தோன்றித் தசரதருடைய பிள்ளையாகப் பிறந்து துஷ்டனான ராவணனைக் கொன்று எங்களைக் காக்க வேண்டும் என் அவர் மகாவிஷ்ணுவை வேண்டினர்.

    மகாவிஷ்ணுவும் அதற்கு இணங்கினர். ராவணன் முதலியவர்களைப் பூண்டோடு அழிப்பேன். லோகத்தில் மனிதனாகப் பிறந்து பதினேராயிரம் வருஷம் இருந்து பரிபாலிப்பேன் என்றர். தேவர்கள் மகிழ்ந்தார்கள்.

    தசரர் ஹோமம் செய்து முடிந்ததும் யாககுண்டத்திலிருந்து ஒளிவீசும் ஓர் உருவம் எல்லா அலங்காரத்தோடும் மேலெழுந்து வந்தது. அது கையில் ஒரு தங்கக் கிண்ணம் ஏந்தி இடிபோன்ற குரலில் அரசனே பிரம்மா என்னை உம்மிடம் அனுப்பினர். இந்த யாகத்தால் தேவர்கள் பூர்ண திருப்தி அடைந்ததால் உமக்கு அவர்களுடைய அருள் கிடைத்தது. இந்தப் பாயசத்தை உம்முடைய மனைவிமாருக்குக் கொடும். உமக்கு உத்தம புத்திரர்கள் பிறப்பார்கள் என்று சொல்லிக் கிண்ணத்தைத் தசரதரிடம் கொடுத்து மறைந்தது. தசரதரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பாயசத்தைக் கௌசல்யை சுமித்திரை கைகேயி இந்த மூன்று ராணிமாருக்கும் கொடுத்தார். சுமித்திரைக்கு இரண்டு முறை கொடுத்தார்.

    இதற்கிடையில் தேவர்களிடம் பிரம்மா ராவணனைக் கொல்ல மகாவிஷ்ணு பூமியில் மனித உருவம் எடுக்கிறார். ஆகவே அவருக்கு உதவியாக நீங்கள் பலரை அனுப்பவேண்டும் என்றர். அதன்படி தேவர்கள் பராக்கிரம சாலிகளும் வேண்டிய உருவம் கொள்பவர்களுமான பல தேவர்களை வானரர்களாகவும் கரடிகளாகவும் உலகில் பிறந்து ராமருக்கு உதவும்படி அனுப்பினார்கள். வாலி, சுக்கிரீவன், தாரன், கந்தமாதனன், நளன், நீலன், மைந்தன், துவிதன், சுஷேணன், சரபன், ஹநுமான் என்று எண்ணற்ற வீரர்கள் ஸ்ரீராமருக்கு உதவியாக இருக்கப் பூமியில் தோன்றினார்கள்.

    தசரதர் யாகத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் தகுந்த மரியாதைகள் செய்து அனுப்பினர். யாகம் முடிந்த பன்னிரண்டாம் மாதம் சித்திரை முன் பகுதியில் பதினேராம் நாள் புதன்கிழமையன்று புனர்ப்பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் கௌசல்யைக்கு ஸ்ரீராமர் புதல்வராகப் பிறந்தார். பிறகு பூச நட்நத்திரத்தில் கைகேயிக்குப் பரதன் பிறந்தான். ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்திரை லட்சுமண சத்துருக்கினர்களைப் பெற்றாள். குழந்தைகள் பிறந்ததும் ஊரெங்கும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. பதின்மூன்றாம் நாள் குழந்தைகளுக்குப் பெயரிட்டார்கள். குழந்தைகள் வேகமாக வளர்ந்து வந்தார்கள். அன்னப்பிராசனம், சௌளம், உபநயனம் எல்லாம் முறையே நடந்தன. இந்தச் சிறுவர்களுக்கு யானையேற்றம், குதிரையேற்றம், வில்வித்தை, தேர் ஓட்டுதல், வேட்டை ஆடுதல் மற்றும் எல்லாச் சாஸ்திரங்களும் போதிக்க ஏற்பாடாயிற்று. லட்சுமணன் ராமரை விட்டுப் பிரியவே மாட்டான். அதுபோல் சத்துருக்கினன் பரதனைப் பிரியவே மாட்டான். நாலு பேரும் வேதத்தையும் மற்றும் எல்லாக் கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார்கள்.

    யாகம் காத்தல்

    தசரதர் தம் பிள்ளைகளுக்கு மணம் முடிக்க விரும்பினர். அவர்களுக்குத் தகுந்த பெண்கள் எங்கே இருக்கிறர்கள் என்று யோசித்தார். அப்போது விசுவாமித்திரர் அவரைக்

    Enjoying the preview?
    Page 1 of 1