Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saadhi Rathathil Oduhirathu
Saadhi Rathathil Oduhirathu
Saadhi Rathathil Oduhirathu
Ebook286 pages2 hours

Saadhi Rathathil Oduhirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
LanguageUnknown
Release dateMay 6, 2016
ISBN6580101500239
Saadhi Rathathil Oduhirathu

Read more from Jyothirllata Girija

Related to Saadhi Rathathil Oduhirathu

Reviews for Saadhi Rathathil Oduhirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saadhi Rathathil Oduhirathu - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    சாதி இரத்தத்தில் ஓடுகிறது

    Saadhi Rathathil Odukirathu

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books
    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    முன்னுரை

    சாதி இரத்தத்தில் ஓடுகிறது என்ற இந்தக் கதை ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் ‘கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்’ என்று திரு. மேதாவியவர்களால் எனது மனமொப்பிய சம்மதமின்றி அல்லது முழுமனத்துடன் அல்லாத சம்மதத்துடன் மாற்றப்பட்ட தலைப்பின்கீழ் 1975 பிப்ரவரியில் தொடங்கி வெளிவந்தது. ‘சாதி இரத்தத்தில் ஓடுகிறது’ என்று சொன்னதன் வாயிலாக, சாதி என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கிறது இருந்தே தீர வேண்டும் அது இரத்தத்தில் ஓடவும் செய்கிறது, சாதிகள் இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, அந்தக் காரணம் பற்றி அதை வெளியிட்ட சுதேசமித்திரனும் கூடச் சாதிகளில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றெல்லாம் அந்தத் தலைப்பு தன்னைப் பார்த்தவர்களை நினைக்கவைக்கும் என்பதால் அதை மாற்றியாக வேண்டிய இன்றியமையாமையை அவர் சிறிது நேரம் வாதித்தார். கதையின் தலைப்புத் தர்க்கத்திற்குரியதாக இருப்பினும் கதையைப் படித்து முடித்ததன் பின்னர் சாதிகள் பற்றிய என் கருத்துகளை நன்கு அறிந்துள்ள பல வாசகர்கள் அதைப் படிக்காமலேயுங்கூட அப்படியெல்லாம் என்னைப் பற்றியோ சுதேசமித்திரனைப் பற்றியோ தவறாக நினைக்கவே மாட்டார்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அன்னார் செவிமடுத்தாரில்லை. எனவே அவர் தாமே மிகவும் சிந்தித்து, கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள் என்கிற தலைப்பை அதற்குச் சூட்டினார். அதுவும் கதைக்குப் பொருத்தமான தலைப்பாகவே இருப்பினும், நான் வைத்திருந்த தலைப்பே எனக்குப் பிடித்திருந்தமையால் அதையே புத்தகமாக வெளிவரும் அந்தக் கதைக்கு இப்போது சூட்டியுள்ளேன்.

    நாகரிகமும் மனிதப் பண்பும் உடைய மனிதர்கள் சாதிப் பிரிவுகளிலோ அவற்றின் அவசியத்திலோ நம்பிக்கை வைக்க மாட்டார்கள். இன்றையச் சூழ்நிலையில் மனித இனத்தை இரண்டு வகைகளில்தான் சாதிப்பிரிவு செய்ய முடியும். ஏழை-பணக்காரன் அல்லது ஆண்-பெண் ஆகிய இருவிதங்களில்தான்! ஆயினும், பரந்த மனப்போக்கும், விட்டுக் கொடுக்கும் தன்மையும், சுயசாதிப் பற்றின்மையும், புரிந்துணர்வும் இல்லாதவர்கள் ஒத்தசாதித் திருமணத்துக்கே தகுதியற்றவர்கள் என்பது ஒருபுறமிருக்க கலப்பு மணத்துக்குக் கண்டிப்பாகச் சிறிதும் தகுதி இல்லாதவர்கள் என்பதையும் அவர்கள் செய்து கொள்ளுகின்ற கலப்புத் திருமணம் எவ்வாறு தோல்வியில் முடிகிறது என்பதையும் தோல்வியில் முடியாவிடினும் கூட எத்தகைய மோசமான விளைவுகளுக்கு அது அடிகோலுகின்றது என்பதையும் இந்தக் கதையில் விளக்கியிருக்கிறேன். இதனால் நான் கலப்புத் திருமணத்துக்கு எதிரானவள் என்று ஒரு போதும் ஆகாது. ‘கலப்பு மணங்களால் காலப் போக்கில் சாதிகள் அழிந்து விடும்’ என்பது கவர்ச்சி நிறைந்த வாதமாகவும், பேச்சளவில் ஒப்புக் கொள்ளத் தக்கதாகவும் இருப்பினும், சுயசாதிப்பற்றுக் கொண்டவர்கள் இவர்கள் பெரும்பாலோர் என்பதையும், சாதி உணர்ச்சிகளை வென்றவர்கள் மிகச் சிலரென்பதையும், காலமாறுபாட்டுக்கு ஒப்பந்தம் கருத்துக்களை வாயளவில் மட்டுமே இவர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது செய்து கொள்ளுகிற கலப்பு மணங்களால் இன்னுமொரு புதிய சாதியே தோன்றி வருவதாகவே தெரிகிறது. சுருக்கமாய்க் கூறின், கணவன்மார் சாதிக்கு மனைவிமார் தங்களை விரும்பியோ விரும்பாமலோ மாற்றிக் கொண்டாக வேண்டிய வெட்கக்கேடே இந்தக் கலப்பு மணத்தால் நிகழ்ந்து வருகிறது. ஆணின் சாதிக்குப் பெண்ணையும் அவள் பெறுகிற குழந்தைகளையும் மாற்றும் இந்தக் கலப்பு மணங்கள் சாதிகளை ஒழித்துக்கட்ட எந்த வகையில் துணை செய்கின்றன? இதில் சாதி ஒழிப்பு எங்கே ஐயா இருக்கிறது?

    இந்தக் கதையையும், சாதிப்பற்றும் மதப்பற்றும் கொண்ட குறுகிய மனத்தினர் இவர்களே பெரும்பாலோர் என்பதைத் திரும்பவும் கவனிக்க செய்து கொள்ளுகிற கலப்பு மணத்தால் ஏற்படுகிற தீமைகளையும், குறிப்பாகப் பெண்கள் படுகின்ற இடர்களையும் விளக்கிக் கலைமகளில் நான் எழுதிய கட்டுரையையும் படித்துவிட்டு என்னைக் குறுகிய சாதிப்பற்றுடன் தொடர்பு படுத்திய சிலரை நான் அறிவேன். அது அவர்களின் புரிந்து கொள்ளாத் தன்மையை காட்டுகிறது.

    எனினும் என் எழுத்துகள் எல்லாவற்றையும் படித்துள்ளவர்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதை அறிவேன். ஏனெனில் ஆனந்த விகடனில் வெளி வந்த எனது முதற் குறுநாவலே ‘மனமொத்த காதலுக்குச் சாதி வேறுபாடு தடையாக இருத்தல் கூடாது’ என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. ‘அரியும் சிவனும் ஒண்ணு’ என்கிற இந்தக் கதையை நினைவு கூர்ந்தால், யாரும் இந்தக் கதையில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதைத் தவறாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்கிற முழு நம்பிக்கை எனக்கு உண்டு.

    ஜோதிர்லதா கிரிஜா

    சென்னை -600 101

    ஜூன், 2014

    1

    தன் தாயாருக்கு உடல் நிலை சரியாய் இல்லை என்பதற்காகக் கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறையில் இருந்து விட்டுத் திரும்பிய துர்க்காவை அளவு கடந்த உற்சாகத்துடன் வரவேற்றான் திருமலை.

    வாங்க, வாங்க. நீங்க இல்லாம செக்ஷன்லெ களையே இல்லை என்று சுற்றுப் புறத்தை அறவே மறந்தவன் போன்று தன் இயற்கைக்கு முரணான தடபுடலுடன் அவன் தன்னை வரவேற்றதைக் கண்ட அவள் அசந்துதான் போனாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பது உடனே தோன்றாததால், சிவந்து போன முகத்தை உயர்த்தி அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அவள் தலையைக் குனிந்து கொண்டாள். கட்டுப்பாடு மிக்க திருமலையிடம் அவள் சற்றும் எதிர்பாராத வகையில் தோன்றிய அந்த உற்சாகம் அவளைத் தடுமாறச் செய்தது. கூச்சம் நிறைந்த ஒரு பெண்ணுக்குரிய சங்கடத்தை மறைத்துக் கொள்ள முடியாமல் அவள் சட்டென்று திரும்பவும் தலையை உயர்த்தி அக்கம் பக்கத்தில் யாரேனும் இருந்தார்களா என்பதைக் கவனிப்பதற்காகச் சுற்று முற்றும் பார்வையைச் சுழற்றினாள். அந்த பெரிய அறையில் பத்து மணியடிப்பதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்த அந்த நேரத்தில் அவனையும் தன்னையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதைக் கண்ட துர்க்கா, ‘அதுதான் வரவேற்பு இவ்வளவு அமர்க்களப்படுகிறது போலிருக்கிறது’ என்று தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

    ‘நீங்க இல்லாமெ செக்ஷன்லெ களையே இல்லை’ என்ற அவனது கூற்றுக்கு என்ன பதில் சொல்லுவது என்று சில கணங்கள் யோசித்த பிறகும் ஒன்றும் தோன்றாமையால், ‘அப்படியா?’ என்று கேட்டுவிட்டு அவள் தன் நாற்காலியில் உட்காரப் போன போது, உக்காராதீங்க, உக்காராதீங்க என்று அவன் அவளை அவசரமாக இடைமறித்துத் தடுத்தான்.

    ஏன்? என்றாள் அவள் வியப்புடன்.

    திருமலை, நீங்க லீவ்லெ போனதுலேர்ந்து உங்க நாற்காலியை யாரும் துடைக்கவும் இல்லை, உபயோகப் படுத்தவும் இல்லை. வெள்ளைப் புடவை கட்டிக்கிட்டு அதுலெ உக்காராதீங்க. ஒரே தூசி என்றான்.

    அவனது போக்கில் தென்பட்ட திடீர்ப் புதுமை அவனது மனத்தை அவள் ஓரளவு ஊகித்து அறிந்திருந்த போதிலும், அதை அவன் அதுகாறும் இலைமறை காயாகக் கூட வெளிப்படுத்திக் கொண்டதில்லை என்கிற காரணத்தால் அவளை ஒருவகைப் பரபரப்பில் ஆழ்த்திற்று. அந்தப் பரபரப்பின் மிதமிஞ்சிய உள்ளுணர்வால் உந்தப் பெற்று, அவள் தன் ஆழ்ந்த பார்வையால் அவனை அளக்க விரும்பியவள் போல் பக்கவாட்டில் தலையைச் சாய்த்துப் பார்த்த போது, அவனும் அவ்வாறே தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தது கண்டு முகமெல்லாம் சிவந்து போய்த் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.

    இலேசாக நடுக்கமுற்ற கைகளைச் சமாளித்த வண்ணம் அவள் துடைப்பானைத் தன் மேசை இழுப்பறையிலிருந்து எடுத்து மேசையைத் துடைத்து விட்டு, நாற்காலியைத் துடைக்க மறந்து போய் அதில் உட்கார முற்பட்டபோது, நாற்காலியை அவள் துடைக்க மறந்து போனதை அவன் நினைவு படுத்திவிட்டுச் சிரித்தான். ஒரு சிறு தடுமாற்றம் தன்னுள் விளைவித்த குழப்பத்துக்காக வெட்கியவாறு துர்க்கா அதைத் துடைக்கலானாள். துடைத்து விட்டு அவள் தலை நிமிர்ந்த போது அவனது முகத்தில் விளையாடிய குறுஞ்சிரிப்பு தனது தடுமாற்றத்தை அவன் தெரிந்து கொண்டு விட்டதன் விளைவுதான் என்பதைப் புரிந்து கொண்டு விட்ட கூச்சத்தில் அவளது முகம் மேலும் சிவந்து குழம்பிற்று. அவளது முகத்தில் விட்டு விட்டு மலர்ந்த செம்மையை நன்றாகக் கவனித்த திருமலைக்கு நம்பிக்கை துளிர் விட்டது. வெகு நாட்களாகத் தன் மனத்துள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை வெளியிட்டுவிட அதை விடவும் தோதான நேரம் வாய்க்குமா என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்த திருமலை, நாற்புறமும் தன் கண்களைச் சுழற்றிய பின்னர், குரலைத் தணித்துக் கொண்டு, கல்யாணத்துக்காகத்தான் லீவ் போட்டிருக்கீங்கன்னு நம்ம செக்ஷென்லெ சிலர் பேசிக்கிட்டாங்க. அதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்திச்சு! என்றான். இதைச் சொன்ன போது அவனது பார்வை நீட்சியாக அவள் மீது படிந்திருந்தது.

    துர்க்காவுக்குச் சிரிப்பு வந்தது. ஓசை எழுப்பாமல் உதடுகளை மட்டுமே மலர்த்திப் புன்னகை செய்த அவள் மிகவும் சிவந்து போனாள்.

    அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னுதான் லீவ் போட்டேன். வேற ஒண்ணுமில்லே!

    என்ன உடம்பு உங்க அம்மாவுக்கு?

    வேற ஒண்ணுமில்லே. சாதாரண பலகீனந்தான். ஆனா ஓய்வு குடுக்கணும்னு டாக்டர் சொன்னார். அதுதான் லீவ் எடுத்துண்டு அவங்களை ரெண்டு வாரம் ரெஸ்டுலெ வெச்சேன்…

    அவன் சுவர்க் கெடியாரத்தைப் பார்த்தான். பத்தடிக்க இன்னும் ஏழு நிமிடங்கள் இருந்தன. அவள் நாற்காலியில் அமர்ந்ததும் அவன் நன்றாகத் திரும்பி அவளைப் பார்த்தான் ‘உங்களுக்கு ஏன் அதிர்ச்சியாயிருந்தது?’ என்று அவள் கேட்டால் தன் வேலை எவ்வளவு எளிதில் முடிந்துவிடும் என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் அவள் ஏதும் கேட்கவில்லை. வெட்கம் காரணமாகவே அவள் பேசாமல் இருந்தாள் என்பது அவனுக்கு விளங்கிற்று. இதனால் அவன் ஏற்கெனவே கொண்டிருந்த நம்பிக்கை இன்னும் மிகுதியாயிற்று. சூட்டோடு சூடாகக் கேட்டு விடுவதுதான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

    துர்க்காவும் அதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் அந்தப் பிரிவில் வேலை செய்து வருகிறார்கள். திருமலை தன்னைப் பார்க்கிற பார்வையிலிருந்தே துர்க்கா ஓரளவு அவனது மனத்தைத் தெரிந்து வைத்திருந்தாள். ஆனால் கலகலவென்று பேசிப் பழகும் தன்மை அவனிடம் இல்லை. இதனால் அவர்கள் அவ்வளவாகப் பழகாமலே இருந்து வந்தார்கள். ‘ஒருகால் எனக்கும் அவருக்குமிடையே இருக்கிற பேதம் காரணமாக என்னிடம் மனம் விட்டுப் பேசுகிற துணிச்சல் அவருக்கு இல்லாமற் போயிருந்திருக்கலாம்’ என்று அவள் தனக்குள் நினைத்துக் கொண்டாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவன் விடுமுறையில் செல்ல நேரிட்ட மூன்று தடவைகளிலும் அவளும் கூட விடுமுறையில் இருந்து விட்டாள். இதனால் முதன் முதலாக அலுவலகத்தில் அவளைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் பிரிந்திருந்ததால் அவனிடம் விளைந்திருக்கக் கூடிய ஏக்கமே அவனை அவ்வளவு பேச வைத்து விட்டது என்பதை அவள் புரிந்து கொண்டாள். எதையோ ‘சொல்லலாமா, வேண்டாமா?’ என்பது போல் அவன் சிறிது தயங்கியதையும் அவள் கவனிக்கத் தவற வில்லை. பாதிக்கு மேல் புரிந்து விட்ட குறுகுறுப்பிலும் வெட்கத்திலும் துர்க்கா மேசையின் மேல் விரல் நகத்தால் கீறத் தொடங்கினாள்.

    ரொம்ப நாளா உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்னு என்றான் அவன்.

    அவள் திரும்பி அவனைப் பாராமலே, சொல்லுங்களேன் என்றாள்.

    நான் என்ன சொல்லப் போறேன்னு இதுக்குள்ளே உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே? என்று கேட்டு விட்டு அவன் வாய் விட்டுச் சிரித்தான்.

    புரிஞ்சுது… ஆனா…

    ஆனா என்ன?

    அவனது கேள்விக்குப் பதில் சொல்ல அவள் வாய் திறந்த நேரத்தில் பியூன் ரத்தினம் அந்தப் பிரிவுக்குள் நுழைந்தான். துர்க்கா தலையைத் திருப்பிக் கொண்டு தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள். திருமலை ஏமாற்றத்துடன் தானும் ஒரு ஃபைலை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டான்.

    ‘புரிஞ்சுது, ஆனா…’ எனும் சொற்களைச் சுற்றியே அவனது எண்ணப் பறவை வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவளை எங்காகிலும் தனியாகச் சந்தித்து விரிவாக அது பற்றிப் பேச அவன் துடித்தான். அன்று மாலையே அந்தச் சந்திப்பு வாய்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று எண்ணினான். தன் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்த உற்சாகம் மட்டுப்படாத நிலையில் அவளிடம் பேசுவது அவளுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. எனவே அவன் ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணியவாறு அவளைத் தனியாகப் பார்த்துப் பேசும் நேரத்துக்காகக் காத்திருக்கலானான். கடைசியில் பிற்பகல் மூன்று மணிக்குத்தான் அவளோடு ஒரே ஒரு நிமிடம் பேசும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியது.

    இன்னிக்கு சாயந்தரம் பீச்சுக்குப் போய் உக்காந்துக்கிட்டு விவரமாப் பேசலாமா? என்று அவன் அடித் தொண்டையில் அவளிடம் கேட்டான்.

    பீச்சுக்கா? என்ற துர்க்கா, மறு கணமே, சரி… என்றாள்.

    காந்தி சிலை கிட்ட நான் முதல்லெ போய்க் காத்துக்கிட்டு இருக்கேன். நான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி கௌம்பிப் போயிடறேன். நீங்க அதுக்கு அப்புறம் கௌம்புங்க… அங்கே நாம சந்திச்சதுக்குப் பெறகு ஒதுக்குப் புறமாய்ப் போய்ப் பேசுவோம்… என்று அவன் மிக அவசரமாகச் சொல்லி முடித்து விட்டு, காப்பிக்குச் சென்றிருந்தவர்களின் குரல்களும் காலடி யோசைகளும் பிரிவை நெருங்கிக் கொண்டிருந்ததால், விரைவாகத் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

    அவனது முதுகுப் புறத்தைக் கண்கொட்டாமல் நோக்கிய துர்க்காவின் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. அவளையும் அறியாமல் கங்காபாயின் முகம் அவள் மனக் கண்கள் முன்பு தோன்றியது. அமைதியும், அன்பும் நிறைந்த அந்தப் பெரிய முகத்தை நினைத்துப் பார்த்தால் ஏதோ தப்புச் செய்து கொண்டிருப்பது போன்ற குறுகுறுப்பு அவளை அரிக்கலாயிற்று.

    ‘அம்மாவுக்கு நான் செய்யப் போற காரியம் பிடிக்குமா? கல்யாணம்னு ஒண்ணு ஆறதுக்கு முந்தி அவன் என்னதான் நல்லவனாயிருந்தாலும் ஒரு ஆண் பிள்ளையோட பீச்சுக்குப் போய் உட்கார்ந்து பேசறது கொள்றதெல்லாம் அவளுக்குச் சம்மதமாய் இருக்குமா?’ என்று ஒரு கணம் அவள் தன்னை மறந்து சிந்தித்தாள்.

    ஆனால் அவளது அந்தக் குற்ற உணர்வை ஆசை வென்றதால், மனத்தின் குறுகுறுப்பை வலுக்கட்டாயமாக உதறிவிட்டு அவள் மாலை மணி ஐந்து அடித்ததும் திருமலையிடம் சொல்லியிருந்தபடி கடற்கரைக்குச் செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தாள். திருமலை ஏற்கெனவே சென்று விட்டிருந்தான்.

    படபடவென்று அடித்துக் கொண்டிருந்த இதயத்தின் துடிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் அவள் காந்தி சிலையை அடைந்த போது திருமலை ஏற்கெனவே அவளுக்காக அங்கே காத்திருந்தபடி அவளை நோக்கிப் புன்னகை செய்தான்.

    இருவரும் விரைந்து நடந்து ஓர் ஒதுக்குப்புறத்தை தேடி உட்கார்ந்து கொண்டார்கள்.

    உட்கார்ந்ததன் பிறகும் சிறிது நேரம் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தொன்று தொட்டு இருந்து வரும் நடைமுறைப் பழக்கத்திற்கிணங்க ஆண்மகனாகிய திருமலையே பேச வேண்டும் என்று எதிர்பார்த்தவளாய்த் துர்க்கா மணலையளைந்த படி சிவந்து கிடந்த முகத்துடன் கடலலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். திருமலை கடற்கரைக் காற்றில் பறந்தபடி அவளது நெற்றியில் விளையாடிக் கொண்டிருந்த சுருண்ட கூந்தலையும், அது கண்களில் விழுவதைத் தடுப்பதற்காக அவள் அடிக்கடி தன் தலையை ஒரு பக்கமாகச் சாய்ந்து உதறிக் கொள்ளும் துடிப்பையும் அழகு பார்த்த வண்ணம் சில வினாடிகள் வரை பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

    காத்து என்னமோ நல்லாத்தான் அடிக்குது. ஆனாலும் புழுக்கமாய் இருக்குது இல்லே? என்று அவன் தங்களிடையே நிலவியிருந்த மௌனத்தைக் கலைத்தான்.

    ஆமா. புழுக்கமாத்தான் இருக்கு என்று அவனை ஆமோதித்த துர்க்கா அவனைப் பார்த்துப் பொருள் பொதிந்த புன்னகை ஒன்றை உதிர்த்தாள். தன் புன்னகையின் பொருளை அவன் புரிந்து கொண்டானோ இல்லையோ என்கிற ஐயம் அவளுக்கு உடனே ஏற்பட்டதால், மனப்புழுக்கத்தைச் சொல்றேன் என்று விளக்கி விட்டு வாய் விட்டுச் சிரித்தாள். திருமலையும் அவளது சிரிப்பில் கலந்து கொண்டான்.

    மனப்புழுக்கம் எதுக்காக ஏற்படணும்? என்று அவன் கேட்கவும்

    Enjoying the preview?
    Page 1 of 1