Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puriyatha Aanandham Pudhidhaga Aarambam!
Puriyatha Aanandham Pudhidhaga Aarambam!
Puriyatha Aanandham Pudhidhaga Aarambam!
Ebook164 pages1 hour

Puriyatha Aanandham Pudhidhaga Aarambam!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Puriyatha Aanandham Pudhidhaga Aarambam!

Reviews for Puriyatha Aanandham Pudhidhaga Aarambam!

Rating: 4.166666666666667 out of 5 stars
4/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puriyatha Aanandham Pudhidhaga Aarambam! - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்!

    Puriyatha Aanandham Pudhidhaga Aarambam!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    என்னுரை

    வாசக நெஞ்சங்களுக்கு,

    வணக்கம்! "அக்‌ஷயா பப்ளிகேஷன் வாயிலாக முதல் முறையாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்...! நாவலில் நாயகி சம்யுக்தாவும் கதாநாயகன் பிருத்வியும் ஒருவர் மனதில் ஒருவர் குடியிருந்தாலும்... சதா சாடிக் கொள்வதும் மோதிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.

    பிருத்வியின் பிறப்பில் மறைந்திருக்கும் மர்மத்தை சம்யுக்தா எப்படி வெளிக்கொண்டு வருகிறாள்? இந்த இளம் காதலர்கள் இறுதியில் எப்படி இணைகிறார்கள்? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    இந்த நாவலில் மேக மலையை கதைக்களமாய் காட்டியிருக்கிறேன். வாசகர்கள் ஜில்லென்ற வனாந்தரத்திற்கே சென்று வந்ததைப் போல் உணர்வீர்கள்.

    மாதந்தோறும் பச்சைப் பசேலென்று இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ரம்யமான வனாந்தரத்திற்கு. உங்களை அழைத்துச்செல்லவிருக்கிறேன்.

    இப்போது குற்றால சீசன் களை கட்டியிருக்கிறது அல்லவா? அடுத்த மாதம்... குற்றாலத்தை கதைக்களமாக வைத்து ஒரு அருமையான நாவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

    ஆசிரியர் திரு. எம்.எஸ்.சித்ரா அவர்களுக்கு... என் இதயம் கனிந்த நன்றி!

    உங்களது மேலான கருத்துக்கள்... என்னை மென்மேலும் உற்சாக மூட்டும். வாசகர்கள் தங்களது கருத்துக்களை எனது இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.

    மிக்க நன்றி!

    அன்புடன்

    உங்கள்

    லட்சுமி பிரபா எம்.ஏ. பி.எட்.

    lakshmiprabanovelsreview@gmail.com

    புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்!

    1

    மலைக்காற்று சுழன்றடித்தது.

    வனாந்தரத்து விருட்சங்கள் காற்றடித்த வேகத்திற்கு கிட்டத்தட்ட நாற்பத்தைந்து டிகிரி சாய்ந்து விட்டு பின் நிமிர்ந்தன.

    கிளைகளும் இலைகளும் சலசலத்தபடி காற்றிற்கு நர்த்தனமாடின.

    கண்ணாடி ஜன்னல் வழியே இயற்கை அழகை விழிகளால் பருகிக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு இருப்பே கொள்ளவில்லை.

    சட்டென்று சாத்தியிருந்த கதவை நோக்கி நடந்தாள்.

    எங்கேம்மா கிளம்பிட்டே?

    ஸ்வெட்டர், மப்ளர் அணிந்திருந்த சபாபதி அவளை ஊன்றிப் பார்த்தார்.

    வெகு தொலைவிலிருந்து யானை பிளிறிய ஓசை சன்னமாய் கேட்டது.

    ரொம்ப ரம்யமா இருக்குப்பா. வெளியில போயி வேடிக்கை பார்க்கலாம்னு ஆசையா இருக்கு.

    கெஸ்ட்ஹவுஸ் வளாகத்தைத் தாண்டிப்போகாதே சம்யுக்தா இது வனாந்தரம் ஞாபகமிருக்கட்டும். யானை பிளிறின சத்தத்தைக் கேட்டேயில்ல?

    "சரிப்பா... நம்மை மாதிரி ரசனைப் பிரியர்களுக்காக வனாந்தரத் துக்குள்ளே கட்டப்பட்ட கெஸ்ட் ஹவுஸ்!

    இயற்கை அழகை அணுஅணுவா ரசிக்கத்தானே இவ்ளோ தூரம் வந்திருக்கோம்?

    ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடக்க மனசு வரலைப்பா. அதான்."

    "அது சரி இப்பத்தானே விடிஞ்சிருக்கு? மணி ஆறுதானே ஆகுது? உள்ளேயே இப்படி குளிர் நடுக்கி எடுக்குது?

    வெளியில காத்தடிக்கிற வேகத்தைப் பார்த்தா... ஆளையே தூக்கிட்டுப் போயி தூரமா கடாசிடும் போலிருக்கே?"

    அப்பாவின் பேச்சை செவி மடுத்தபடியே சாற்றியிருந்த கதவைத் திறந்தாள் சம்யுக்தா. கதவைத் தொறந்ததும் மரங்களோட மர்மர சப்தம் எப்படி காதைப் பிளக்குது பார்த்தியா?

    வனாந்தரத்துப் பறவைகளின் கலகலத்வனியைக் கேட்கும் போது. செவியில தேன் வந்து பாயுதே அப்பா?"

    புன்முறுவல் பூத்தபடியே எதிர்க்கேள்வி கேட்டாள்.

    "ஹூம்! இனிமே நான் என்ன சொன்னாலும் நீகேட்கப் போறதில்ல. உனக்குத்தான் அலாதி ரசனையாச்சே? இன்னும் சொல்லப் போனா. நீ ஒரு ரசனைப் பைத்தியமாச்சே?

    இந்த நேரத்துல உன் ஆசைக்கு அணை போட முடியாது தான். அழகு கொட்டிக் கிடக்கிற இயற்கைப் பிரதேசத்துல ஆபத்துகளும் அதிகம் இருக்கும்.

    இதை ஞாபகத்துல வச்சுக்கோ. ஜாக்கிரதையா இருக்கணும்டா."

    சரிப்பா. நான் என்ன ஸ்கூல் பேபியா? தி கிரேட் லாயர் சபாபதி யோட பொண்ணு. லா காலேஜுல படிப்பை முடிச்சுட்டு வந்தவள். நான் எப்பவும் கேர்ஃபுல்லா தான் இருப்பேன். யூ டோண்ட் ஒர்ரி டாடி!"

    சிரித்தபடியே வெளியேறினாள்.

    இந்த அப்பா இன்னமும் என்னை குழந்தையாவே நெனச்சுட் டிருக்கிறாரு...

    சன்னமான குரலில் அவள் முணுமுணுத்ததை செவிமடுத்து விட்டார் சபாபதி.

    "மெத்தப் படிச்ச பொண்ணு. கோல்டு மெடல் எல்லாம் வாங்கினவ. படிப்பை முடிச்சுட்டு டிஸ்டிங்ஷனில் தேறி லாயராயிட்டே, திறமை சாலிதான். சகலகலா வல்லிதான்.

    ஆனாலும் என்னிக்கும் நீ எனக்குக் குழந்தைதான். தெரிஞ்சுக்கோ...!"

    வயிற்றை எக்கி குரல் கொடுத்தார்.

    "பயப்படாதீங்கப்பா. காலை நேரத்து ரம்யமான காட்சிகளை ரசிச்சுட்டு அரை மணி நேரத்துல வந்துடுவேன்.

    பக்கத்துல காலார வாக்கிங் பண்ணிட்டு திரும்பிடறேன். காத்து பலமா அடிக்குது. கதவைச் சாத்திடறேன்."

    கெஸ்ட் ஹவுஸ் சின்ன ரிசார்ட்டைப் போல் சகல வசதிகளுடன் குட்டி பங்களாவின் சைஸில் இருந்தது.

    காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி உள்ளே வந்தால் விஸ்தாரமான இடம். சிறுவர்கள் தாராளமாய் கிரிக்கெட் விளையாடலாம்.

    சுற்றிலும் விதவிதமான பூச்செடிகள் நிழல் தரும் மரங்கள்.

    அந்தப் பக்கமாய் கெஸ்ட் ஹவுஸ். காம்பவுண்ட் சுவர் சற்றே தணிவாய் தான் இருந்தது.

    வனாந்தரத்தின் வனப்பைக் கண்டு ரசிக்கும் வண்ணம் தோதாய் காட்டேஜ் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தாள்.

    வேடிக்கை பார்த்தபடி உணவருந்த வசதியாய்... வராந்தாவில் டைனிங் டேபிளை வைத்திருந்தார்கள்.

    பக்கவாட்டில் அலாதியாய் இருந்த சிறு அறையிலிருந்து நடுத்தர வயதைத் தாண்டிய மாணிக்கம் இவளைப் பார்த்துவிட்டு அவசரமாய் வந்தார்.

    டீ கொண்டாரவா தாயீ?

    கொஞ்சம் நேரம் போகட்டும். வாக்கிங் முடிச்சுட்டு வந்து பார்த் துக்கலாம். காலை டிபன் மதியச் சமையல் எல்லாம் நீங்களே செய்துடுவீங்களா?

    காபி, டீ மட்டும் தாம்மாநாங்க போட்டுத்தருவோம். காலை டிபன், மதிய சாப்பாடு இரவு டிபன் எல்லாம் வெளியில மெஸ்ஸிலிருந்து வாங்கிட்டு வருவோம்.

    ஓ.. இங்க பக்கத்துல மெஸ் இருக்கா?

    "அரை பர்லாங் போனாக்க. தேயிலை எஸ்டேட் வரும். இடது புறத்து மேட்டுப் பகுதியில சின்னதா ஒரு வீட்டுல சமைக்கிறாங்க. நாலு பேரு உட்கார்ந்து சாப்பிடலாம். நீளமா பெஞ்ச் டேபிள் போட் டிருக்காங்க.

    இங்க தங்க வர்றவங்க, அங்கே போயி சாப்பிடறதுக்கு விரும்ப் மாட்டாங்க. அதான் நாங்களே ஆட்டோ வச்சுக்கிட்டுப் போயி வேணும்கிறதை வாங்கிட்டு வந்துடுவோம்."

    காம்பவுண்ட் கேட் அருகே ஒரமாய் ஒரு ஆட்டோ நிறுத்தப்பட் டிருப்பதை கவனித்தாள் சம்யுக்தா,

    பரவாயில்லையே? இந்த கெஸ்ட் ஹவுஸை நாடி வர்ற பயணிகளை நம்பி மெஸ் நடத்தறாங்களே?

    இல்ல தாயீ... சுத்து வட்டாரத்துல தூர தூரமா இதைப் போல கெஸ்ட் ஹவுஸ்கள் இருக்கு. அதுல வந்து தங்கறவங்களுக்கும் அந்த மெஸ்லே தான் சமைக்கிறாங்க.

    ஐ.ஸீ இந்த கெஸ்ட் ஹவுஸ் ஒனர் எங்கிருக்காரு?

    இந்த மேகமலைக்கு இப்பத்தான் வந்திருக்கீங்களா தாயி?

    இல்ல. ஏற்கனவே ரெண்டு வருஷத்துக்கு முன்னே வந்திருக் கோம். சுற்றுலா பயணிகளுக்காக கவர்ன்மெண்ட் நடத்தற டிராவலர்ஸ் பங்களாவுல தங்கி இருந்தோம். ஏன் கேட்கறீங்க?

    "அங்கே கசகசன்னு ஜனங்க நடமாட்டம் இருக்கும். இப்ப எல்லாம் தனிமையை விரும்பறாங்க. வனத்தோட இயற்கை அழகை நிம்மதியா ரசிச்சுப் பார்க்க பிரியப் படறாங்க.

    அதைப் புரிஞ்சுக்கிட்டு எங்க ஒனர் மூணு நாலு எடத்துல இதைப் போல காட்டேஜ் கட்டிப் போட்டு வச்சிருக்காரு தாயி!"

    நாங்க ஆன்லைன்ல விளம்பரம் பார்த்து தான் பணம் கட்டி ரூம் புக் பண்ணினோம். உங்க ஒனரை நேர்ல பார்த்துப் பாராட்டணுமே?

    அவரு கார்லே தினமும் ஒரு நடை வந்து பார்த்துட்டு போவாரு தாயி!

    அவர் வர்றப்போ எனக்கு ஒரு குரல் குடுங்க.

    கண்டிப்பா தாயீ!

    வெளிர் நீல வண்ணத்தில் சில்க் காட்டன் புடவை உடுத்தி அடர் நீலத்தில் ஸ்வெட்டர் போட்டிருந்தாள். கருநீல வண்ணத்தில் ஸ்கார்ஃப்.

    பணக்கார வீட்டுப் பொண்ணாயிருந்தாலும் இந்தப் பொண்ணுக்கு பந்தா எதுவும் இல்ல.

    தனக்குள் எண்ணியபடி நடக்க யத்தனித்தவர். திரும்பிப் பார்த்தார்.

    அதற்குள் அவள் காம்பவுண்ட் கேட்டைத்

    Enjoying the preview?
    Page 1 of 1