Unnai Charanadainthen
3/5
()
About this ebook
Reviews for Unnai Charanadainthen
2 ratings0 reviews
Book preview
Unnai Charanadainthen - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
உன்னை சரணடந்தேன்
Unnai Charanadainthen
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
உன்னை சரணடந்தேன்
1
சிக்திக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. புரண்டு புரண்டு படுத்து விட்டத்தையே வெறித்துப் பார்த்தாள்.
முள் மீது படுத்திருப்பதைப் போன்று. படு அவஸ்தையாக இருந்தது.
‘ஒ’ . . .வென்று மனம் விட்டு கதறி அழ வேண்டும் போலிருந்தது. கீழ் உதட்டை அழுந்தக் கடித்து, மவுனமாய் கண்ணிர் வடித்தாள்.
இந்த வீட்டில் அழுவதற்குக் கூட அவளுக்கு சுதந்திரம் இல்லையே!
லேசாக விசும்பும் சப்தம் கேட்டுவிட்டால்... அவ்வளவுதான்! மாமியார் கனகம், நடுராத்திரி என்றுகூட பார்க்காமல், வரிந்து கட்டிக்கொண்டு வந்து.. லட்சார்ச்சனை செய்துவிடுவாள்.
‘அடடடடடா... நீலிக்கு நெத்தியில கண்ணுன்னு சொல்வாங்க. தொட்டதுக்கெல்லாம் கண்ணிர் வடிச்சா. குடும்பம் விளங்குமா? படிச்ச பொண்ணு... உனக்கு அறிவிருக்கா? புகுந்த வீட்டுலே பதவிசா பக்குவமா நடந்துக்கணுங்கிற புத்தி