En Athaan Ennai Kollathan
By Devibala
4/5
()
About this ebook
Reviews for En Athaan Ennai Kollathan
2 ratings0 reviews
Book preview
En Athaan Ennai Kollathan - Devibala
http://www.pustaka.co.in
என் அத்தான் என்னை கொல்லத்தான்
En Athaan Ennaik Kollathan
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
கா
லை மணி பத்தரை.
மெட்ரோ அலுவலகம் சுறுசுறுப்பை அணிந்து கொண்டு இயக்கத் தொடங்கிவிட்டது.
கண்ணாடி கதவுக்குள்ளே கனமான மின்குளிர், மவுன இயக்கம். கம்ப்யூட்டர்களின் ஒசை, காலடி சப்தம் இவைகள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்க, அந்த பெரிய ஹாலில் ஏழெட்டு பெண்கள் பலவித உடைகளில்அமர்ந்திருந்தார்கள்.
மெட்ரோ அலுவலகம் ஏழு மாடிக் கட்டிடம், நகரின் மையத்தில் தன்னை அணிந்து கொண்டிருந்தது.
பத்து நாற்பதுக்கு, அதன் வாசலில் ஆட்டோ வந்து நிற்க, ஆனைய நீலத்தில் சுடிதாரும், ஆனந்தா நீலத்தில் துப்பட்டாவும் அணிந்து அந்தப் பெண் இறங்கினாள். பணத்தை கொடுத்துவிட்டு நிமிர்ந்து ஒரு முறை ஏழு மாடிக் கட்டிடத்தைப் பார்த்தாள்.
மெல்ல நடந்து மின்தூக்கியை நெருங்கினாள். ஹாலில் அவள் நுழையும் போதே பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்து.
சரியாக பதினோரு மணிக்கு தன் கண்டெஸர் க்ளாசிக்கல் வந்து இறங்கிய நரேன்குப்தா, தனி லிஃப்ட் மூலம் தன்னறைக்கு வந்து விட்டான். தன்னை சரியாக அமைத்துக் கொண்டான். குளிர் நீரை எடுத்துப் பருகினான்.
இண்டர்காமை எடுத்து, டேனியல்!
"அடுத்த நிமிடத்தின் முடிவில் டேனியல் என்ற இளைஞன் டைகட்டி, கோப்புடன் பவ்யமாக வந்து நின்றான்.
எல்லோரும் வந்தாச்சா?
மொத்தம் இருபது பேர் சார். எல்லாரும் ரெடி.
பட்டியல் தயாரா இருக்கா?
இருக்கு சார்!
அந்த கோப்பை நீட்டினான்.
அதில், வந்திருந்த பெண்களின் சரித்தரமே தனித்தனியாக பிரிக்கப்பட்டிருந்தது.
சரி டேனியல்! நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்.
சமீபத்தில் நரேனின் செயலாளர் திருமணமாகி வேலையை ராஜினாமா செய்து விட்டதால் இந்த புதிய தேர்வு.
இருபது பேரில் 12 பேரை அப்போதே ரத்து செய்து விட்டான். நரேன். மீதி எட்டு பேர் பேர்களின் பட்டியலை திறமை, படிப்பு என்ற வகையில் வரிசைப்படுத்தினான். முதலாவதாக வந்தது உத்ரா.
இண்டர்காம் அழுத்தி, உத்ராவைக் கூப்பிடும்மா!
இரண்டாவது நிமிடம்? நீலக்சுரிதார் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது.
குட்மார்னிங் மிஸ் உத்ரா!
குட்மார்னிங் மிஸ்டர் நரேன் குப்தா!
லேசாகத் திக்கிட்டு நான் உங்களை இண்டர்வியூ பண்ணப் போறவன். ஸே ஸர்!
மன்னிக்கணும்! நான் உங்க மாணவி இல்ல. நீங்க என் எஜமானரும் இல்லை. மிஸ்டர்னு சொல்லி பேரை சொன்னா அதுவே மரியாதைதான். நான் உட்காரலாமா?
ஒ... ஷ்யூர்! உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!
என்னைப் பற்றின்னா?
உங்க படிப்பு, மற்ற தகுதிகள்?
மறுபடியும் மன்னிக்கணும். சகலமும் என் விண்ணப்பத்துல சொல்லப்பட்டிருக்கு. திரும்பவும் அதைச் சொல்லி, நம்ம ரெண்டு பேர் நேரமும் வீணாகணுமா?
இந்த வேலை உங்களுக்குக் கிடைக்கும்னு தோணுதா உத்ரா?
எனக்கு ஜோசியம் தெரியாது. வேலை கிடைக்கும்னு நினைச்சு, அசட்டுத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னால முடியாது!
தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
வெல் மிஸ் உத்ரா. இது என் செக்ரெட்டரி வேலை. ரொம்பவும் அந்தரங்கமான வேலை!
அவள் சடாரெனப்புருவம் உயர்த்த—
இது ஒரு க்ரூப் கம்பெனி. இன்னிக்கு இந்தியால நம்பர் ஒன், நம்பர் டூ எது தெரியுமா?
தெரியும்! கோபி கிருஷ்ணா அசோசியட்ஸ்!
குட் அவங்க முதலிடத்தைப் பிடிக்க சகல முயற்சிகளையும் செஞ்சுட்டு வர்றாங்க.
ஆனா முடியல. காரணம். உங்க பிசினஸ் ரகசியம், அதை நீங்க கையாளற முறை, தொழில் ரீதியான சில அந்தரங்க ஃபார்முலாக்கள் - இது தான் உங்க முதலிடத்துக்கு காரணம், ஏம் ஐ ரைட்?
அயர்ந்து போனான் நரேன்.
இ.. இதெல்லாம் உங்களுக்கு எப்படி உத்ரா?
ஒரு கம்பெனியோட எ.ம்.டிக்கு செயலாளர்னா எதுவும் தெரியாம இருக்கலாமா? இண்டர்வியூ அட்டை வந்த நாலு நான் முனைஞ்சு சேகரிச்ச தகவல்கள் இதெல்லாம்!
அவளை மதிப்புடன் பார்த்தான்.
‘யெஸ், இந்தக் கம்பெனி ரகசியங்களைப் பாதுகாக்கணும் என் செயலாளர். அதுதான் முதல், முக்கியத் தகுதி!"
அதுமட்டுமில்லை. போட்டிக் கம்பெனியோட வெற்றிகள் எப்படி அமையுதுன்னு கூர்ந்து கவனிக்கணும். முடிஞ்சா முந்திக்க பார்க்கணும். போட்டியாளர்களை கவனிச்சு செயல்படற சூதாட்டம்தானே பிசின்ஸ். சரியா மிஸ்டர் நரேன்?
கண்களை அகலமாக்கி அவளைப் பார்த்தான்.
நைஸ்! கோபி கிருஷ்ணா அசோசியேட்ஸ் பற்றி என்னெல்லாம் உங்களுக்குத் தெரியும்?
இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்தேன். முன்னேற்பாடோட வந்திருக்கேன். இதோ நான் திரட்டின தகவல்கள்.
கைப்பையை திறந்து டைப் செய்யப்பட்ட அந்தத் தாள்களை அவனிடம் நீட்டினாள்.
ஏழெட்டு தாள்கள் ஆங்கிலத்தில் அழகாக டைப் செய்யப்பட்ட விவரங்கள்.
படிக்கப் படிக்க நாற்காலி நுனிக்கு வந்து விட்டான் நரேன். அவன் சற்றும் எதிர்பாராத, ஆனால் அவனுக்கு உபயோகமான ஒரு சில ரகசிய தகவல்கள் மிகவும் அனாயாசமாக அதில் சொல்லப்பட்டிருந்தது.
இதெல்லாம் உங்களுக்கு எப்படி மிஸ் உத்ரா?
தட்டீஸ் உத்ரா. எப்படி நான் சேகரிச்சேன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம். இந்த தகவல்கள் போதுமா? இன்னும் வேணுமா?
அவசரமாக தன் வியர்வையைத் துடைத்துக் கொண்டான் நரேன்.
மிஸ்டர் நரேன்! இந்த வேலை எனக்குக் கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியாது. ஆனா நம்பர் ஒன் கம்பெனி நேர்முகத் தேர்வுக்கு வரும் போது தகுதிகளோட வர வேண்டாமா? அதான் நாலு நாள் கஷ்டப்பட்னே!
இண்டர்காம் அழுத்தினான்.
டேனியல் வந்து நிற்க
மற்ற பெண்களை போகச் சொல்லிரு டேனியல்!
சார்!
மிஸ் உத்ராவை நான் தேர்ந்தெடுத்தாச்சு. ஸ்டெனோ கிட்டச் சொல்லி, அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தயார் செய்யச் சொல்லு!
அவன் அகன்றுதும்--
வாழ்த்துக்கள் மிஸ் உத்ரா!
கண்கள் அகல அவனைப் பார்த்துச் சிரித்தாள் உத்ரா. மெல்ல உதடுகளைப் பிளந்து நன்றி சொன்னாள்.
மிஸ் உத்ரா!
யெஸ் மிஸ்டர் நரேன்!
உங்களை செயலாளரா அடைய நான் பெருமைப்படறேன். உங்க திறமையை மதிக்கிறேன். அதுக்குத் தகுந்த ஊதியத்தை கம்பெனி உங்களுக்குத் தரும் ஆனா...
கம்பெனி ரகசியங்கள் வெளில போகக் கூடாது. அதுதானே?
முகத்தைப் பார்த்து மனசைப் படிக்கத் தெரியுமா உத்ரா உங்களுக்கு?
அப்படி தெரியலைன்னா, இத்தனை பெரிய நிறுவனத்தோட தலைவருக்கு, செயலளரா இருக்க முடியுமா? நான் என்னை நம்ப வைக்க என்ன செய்யணும்?
ஒ... நோ, நான் நம்பறேன். இப்ப உங்களைப் பற்றிச் சொல்லுங்க உத்ரா.
உறவுன்னு சொல்லிக்க ஒரு அக்கா மட்டும் உண்டு எனக்கு. பேர் கிளாரா.
அவங்களும் உத்யோகம் பாக்கறாங்களா?
இல்ல. அவ அதிகம் படிக்கலை. வீட்டோட இருக்கா. எனக்கு உதவியா!
கல்யாணம் ஆகலையா அவங்களுக்கு?
இல்லை!
வயது!
இருபத்தெட்டு.
ஏன்? பண வசதி இல்லையா?
"அதையாவது சமாளிச்சுக்கலாம் நரேன். அவளுக்கு அழகு சுமார். உத்யோகம் இல்லை.
நல்ல குணத்தை யாரும் நாட்ல மதிக்கறதில்லை."
கஷ்டம்தான்.
நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமாகத்தான். இருக்கோம். நானும் சின்னச் சின்ன கம்பெனிகள்ல வேலை பார்த்துட்டுத்தான் இருந்தேன் இது வரைக்கும்.
இன்னும் ஒரு சில விவரங்களைச் சேகரித்தான். அதற்குள் வேலைக்கான உத்தரவு கையில் வந்து சேர்ந்தது. வாழ்த்துச் சொல்லி அவளிடம் தந்தான் அதை.
எப்ப ஜாயின் பண்றீங்க உத்ரா?
இன்னிக்கு திங்கள், வெள்ளிக்கிழமை வேலைல சேரட்டுமா?"
ஆகட்டும். பை த பை, உங்களுக்காக கம்பெனி தனி வீடு ஒதுக்கி இருக்கு. என் பங்களா பக்கத்துல தான். வெள்ளிக்கிழமைக்கு முன்னாலேயே நீங்க குடித்தனம் வந்துரலாம். கம்பெனி கார் உங்களுக்கு உண்டு. 24 மணி நேரமும் உங்க சர்வீசை கம்பெனி எதிர்பார்க்கும்.
நிச்சயமா சார்!
எழுந்து கொண்டாள் உத்ரா.
நான் புறப்பட்டலாமா சார்?
"மிஸ் உத்ரா