Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nodikku Nodi
Nodikku Nodi
Nodikku Nodi
Ebook230 pages2 hours

Nodikku Nodi

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
LanguageUnknown
Release dateMay 12, 2016
ISBN6580100600250
Nodikku Nodi

Reviews for Nodikku Nodi

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Every second the story was so interesting made me read till i reached the end but my guess was not bad

Book preview

Nodikku Nodi - Devibala

http://www.pustaka.co.in

நொடிக்கு நொடி...!

Nodikku Nodi

Author:

தேவிபாலா

Devibala

For more books
http://www.pustaka.co.in/home/author/devibala

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

அத்தியாயம் 36

அத்தியாயம் 37

அத்தியாயம் 38

அத்தியாயம் 39

அத்தியாயம் 40

அத்தியாயம் 41

அத்தியாயம் 42

அத்தியாயம் 43

அத்தியாயம் 44

1

‘வெ

ற்றிதான் லட்சுமி! "

உற்சாகத்தோடு நுழைந்தார் கேசவன்.

செருப்பை அவிழ்த்துவிட்டு, சட்டைப் பட்டன்களை பிரித்துவிட்டார். ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

லட்சுமி குளிர்ந்த நீரை நிரப்பிக் கொண்டு வந்து, அவரெதிரே நீட்டினாள்.

குடித்துவிட்டு, கொரமெண்டல் பேங்க் மானேஜர் என் சிநேகிதர்தான். பெரிய லெவல்ல அனுமதி வாங்கி, சம்மதம் தந்தாச்சு. நாளைக்குப் பணம் கிடைக்கலாம்!

‘எவ்ளோ?" சின்னக் குரலில் கேட்டாள் லட்சுமி.

‘ரெண்டு இலட்சம் வரைக்கும்! "

‘அவ்ளோ பணமா?" வாயைப் பிளந்தாள்.

‘என்ன அவ்ளோ பணம்?நம்ம நிலத்தோட மதிப்பு இன்னிய தேதிக்கு என்ன தெரியுமா?"

‘தெரியலை! "

அன்னிக்கு அண்ணாநகர், மிருகங்கள் ஓடற பூமியா இருந்தப்ப, க்ரவுண்ட் ஆயிரம் ரூபான்னு ஒரே இடத்துல எட்டு க்ரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டேன். பல வருஷங்களுக்குப் பின்னால இன்னிக்கு அதோட மதிப்பு என்ன தெரியுமா? நாப்பது லட்சம். அதை மார்ட்கேஜ் பண்ணித்தானே நமக்கு ரெண்டு லட்சம் தருது பேங்க்!

எப்படியோங்க...நம்ம சுமதி கல்யாணம், பிரச்சனையில்லாம நடக்கும் இனி! சாப்பிட வர்றீங்களா?

உற்சாகமாகச் சாப்பிடப் போனார்.

குளித்து சாப்பிட்டுப் புதிதாக ஒரு வாலிபனைப் போல உணர்ந்தார் கேசவன். பத்திரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

பஸ்ஸில் முண்டியடித்து ஏறினார்.

மூச்சைத் திணறி, வியர்வையில் சொத சொதத்து, அந்த நாற்பது நிமிடப் பயணத்தில், அதுவும் ‘ஏ’ சர்வீஸ் வேகம் நரகம்.

ஐம்பத்து ஒன்பது வயதுக்கு இது கூடாது என்று தோன்றியது. கேசவனைப் பற்றி?

அவசியமில்லை.

அதிகபட்சம் இந்த அத்தியாயம் முழுக்க வரலாம். அதற்கு மேல் கதையில் வரப்போவதில்லை. கேசவன், கதையல்ல. அவர் எடுத்துவரும் ரெண்டு லட்சம்தான் கதை.

தனது பிரதேசம் வந்ததும், பாட்டில் மூடி திறந்ததும் சீறும் கார்பன்டையாக்ஸைடு போல, வெளிப்பட்டார் கேசவன்.

கசங்கிய உடைகளைச் சரியாக்கிக் கொண்டார்.

கக்கத்தில் இடுக்கிய தோல் பையில், பத்திரத்தை பத்திரமாக இருக்கிறதா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.

அந்த நாலு மாடிக் கட்டிடத்தில் பல்வேறு அரசாங்க அலுவலகங்கள் முற்றுகையிட, முதல் மாடியில், ‘கொரமாண்டல் பாங்க்’ என்ற பெரிய எழுத்துக்கள் பளிச்சிட, மூச்சு வாங்க, முதல் மாடியில் ஜனித்தார் கேசவன்.

பத்தரை மணி. லேசாக கூட்டம் சேரத் தொடங்கியிருந்த நேரம் அது.

உள்ளே நுழைந்து, மானேஜரின் அறைக் கதவைப் பிளந்தார்.

‘அடடா, வாங்க கேசவன். பத்திரம் கொண்டு வந்தாச்சா? உட்காருங்க!"

‘இன்னிக்கே கிடைக்குமா?"

‘கண்டிப்பா! வேண்டிய ஏற்பாடுகளைப் போன வாரமே செஞ்சாச்சே. உங்க நிலத்தை பேங்க் இன்ஸ்பெக்ட் பண்ணி, திருப்தி தெரிவிச்சாச்சு. இந்த விண்ணப்பங்களைப் பூர்த்திபண்ணிக் குடுங்க. மைகாட் ! அதெப்படி அண்ணா நகர்ல எட்டு க்ரவுண்ட் நிலம்?"

கேசவன் கொஞ்சம் பெருமிதமாக புன்னகைத்தார்.

‘நாளன்னிக்கு நான் நாகர்கோயிலுக்கு மாற்றலாகிப் போறேன்?"

‘ஈஸ்வரா... நான் பிழைச்சேன் சார் !"

‘யாராயிருந்தாலும் தரவேண்டியதுதானே?"

‘ஆனா தாமதமாகுமே சார் !"

மிச்சம், மீதியைப் பூர்த்தி செய்து, மானேஜரிடம் கொடுத்தார் கேசவன். ‘சார்!"

‘என்ன கேசவன்?"

‘இந்தப் பத்திரம், நான் கொடுத்த அப்ளிகேஷன் இதுக்கெல்லாம் ஜெராக்ஸ் எடுத்து நான் வச்சுக்கலாமா?"

‘செய்யலையா இன்னும்? என்ன கேசவன் நீங்க? எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் எடுத்து, பத்து நிமிஷத்துலதர்றான்!"

பியூனை அழைத்து, ‘நம்ம ஜெராக்ஸ் மெஷின்ல இது எல்லாத்தையும் ரெண்டு, ரெண்டு காப்பி எடுத்து உடனே கொண்டுவா!"

கேசவன் காத்திருந்தார்.

சுமார் 12.40 ஆனவுடன், எல்லா ∴பார்மாலிட்டிகளும் முடிந்து, கேஷ் ரெடியாகிவிட்டது. விவரம் சொல்லப்பட ‘கேசவன், உங்க பணம் தயார் வாங்கிகிட்டு நீங்க புறப்படுங்க!" ஜெராக்ஸ் காப்பிகளை சேகரித்துக் கொண்டார். வெளியே வந்தார்.

ஏற்கனவே டோக்கன் தரப்பட்டிருந்தது.

எலக்ட்ரானிக் சதுரம், காஷியரின் தலைக்கு மேல் எண்களை அறிவிக்க, கேசவன் எழுந்தார்.

விதியும் அவர் கூடவே எழுந்தது.

கவுன்ட்டரில் டோக்கனைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார்.

‘என்ன டினாமினேஷன் சார்? இந்த வித்ட்ராயல்ல இன்னொரு கையெழுத்துப் போடுங்க!"

கையெழுத்துப் போட்டு உள்ளே நீட்டிவிட்டு,’ஹன்ட்ரட்ஸ் கொடுத்துருங்க!"

இருபது கட்டுகள் சரி பார்க்கப்பட்டு, வெளியே நீள, முதலில் கட்டுக்களை எண்ணி வெளியே எடுத்தார். ‘பின்" அடித்த கட்டுகள் ‘என்னை எண்ண வேண்டாம் என்று சொல்ல, மறுபடியும் சரிபார்த்து, ஒவ்வொன்றாக தன் தோல் பைக்குள் சேகரித்துக் கொண்டார். எல்லாம் உள்ளே போனதும், தோல் பை கர்ப்பமானது.

மறுபடியும் மானேஜர் ரூமுக்கு போனார்.

போனில் இருந்த மானேஜர் ‘ஒரு நிமிஷம் என்று சொல்லி, ரிசீவரின் வாயை மூடிக்கொண்டு, ‘வாங்கியாச்சா?

‘தேங்க்யு சார்! உங்க உதவியை நான் மறக்கவே மாட்டேன்."

‘இட்ஸ் ஓகே. நேரா வீட்டுக்குத்தானே? ஜாக்ரதையா போங்க கேசவன். டாக்ஸி வச்சுட்டுப் போயிருங்க. தொகை பெரிசு!"

‘சரி சார். நான் வர்றேன்."

மெல்ல வெளிப்பட்டார் கேசவன்.

வாசலில் இறங்கி, டாக்ஸி கண்ணில் படுகிறதா என்று பார்த்தார்.

டாக்ஸி ஆட்டோ எதுவுமே இல்லை.

இத்தனை பிரதான சாலையில் ஒன்று கூடவா ஓடாது.

பெட்டிக் கடையில் விசாரிக்க –

‘தெரியாதுங்களா? டாக்ஸி, ஆட்டோ ஸ்டிரைக் இன்னைக்கு. அதான் பஸ்ல அம்புட்டுக் கூட்டம்."

பசிப்பது போலத் தோன்ற, திரும்பிப் பார்த்தார்.

உடுப்பி ஓட்டல் ஒன்று தளும்பிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்து, இடத்தைத் தேர்தெடுத்து அமர்ந்து கொண்டார்.

சர்வர் வர, ஏதோ ஆர்டர் செய்துவிட்டு, மார்போடு அந்த பையை அணைத்துக் கொண்டார்.

சப்பாத்தி வந்தது.

‘அவன்" வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான்.

கேசவனின் கண்கள் சப்பாத்தியிலும், ‘அவன்" கண்கள் இவர் வைத்திருந்த தோல் பையிலும் நிலைத்தன.

2

வனுக்கு இடப்புறம் ஒருவர் காப்பியில் இருந்தார்.

கேசவனின் இடதுபுறம் காலியாக இருந்தது.

காப்பிக்காரர் பில் வாங்கிக்கொண்டு நகரட்டும் என்று காத்திருந்தான்.

அவர் நகரும்போது, கேசவன் முக்கால் சப்பாத்தியில் இருந்தார்.

அவர் சட்டென ‘ஹச்" என்று பலமாக ஒரு தும்மல் போட்டான். யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

அரை நொடி விட்டு, அடுத்த தும்மலைப் கொடுத்ததும், பக்கத்து மேஜையில் இருந்த சிறுவன்தடாலென விழுந்தான். கையும், காலும் வெட்டி இழுக்க, கண்கள் செருக–

‘ஓ...வலிப்பு!"

மொத்த ஓட்டலும், தன் கவனத்தை சிறுவன் மேல் பதிக்க–

கேசவனும் ஆர்வத்தை அடக்கமாட்டாமல் உட்கார்ந்த நிலையிலேயே, தலையை மட்டும் கொக்கு போல நீட்டினார் வெளியே.

அந்த நொடியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ‘அவன்’ உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த ஸ்பிரேயைச் சட்டென வெளியே எடுத்து ‘புஸ்ஸ்ஸ்.

மூக்கில் காரமாக உணர்ந்த கேசவன், அதை சுவாசித்த மறு நொடியே கண் மூடிச் சாய்ந்தார்.

‘இரும்பு சாவி ஏதாவது கொடுங்கப்பா!" யாரோ அலற –

இன்னும் கவனம் சிறுவன் மேலிருக்க, எழுந்த ‘அவன்" கேசவனின் தோல் பையை லாவகமாக உருவிக் கொண்டான்.

நிதானமாக வெளியில் நடந்தான்.

காத்திருந்த, தன் புல்லட்டை அணுகினான். உதைத்தான்.

சிறுவன் எழுந்து உட்கார்ந்தான்.திருதிருவென மரியாதையாக விழித்தான்.சோடா கொடுத்தார்கள். குடித்துவிட்டு எழுந்தான்.

அவன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.

சிறுவன் எழுந்து நடக்கத் தொடங்கினான்.’பிடித்துக் கொண்டு உட்கார்ந்துட்டு போ தம்பி."

நடந்து வெளிப்பட்டு, புல்லெட்டை அணுக.

சிறுவனை மறந்தது ஹோட்டல்.

அவன் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைச் சிறுவன் கையில் திணித்துவிட்டு, புல்லெட்டைக் கிளப்பிக் கொண்டு, காணாமல் போனான்.

அரைமணி நேரம்...ஒரு மணி நேரம்...இரண்டு மணி நேரம்...

‘யோவ், சாப்டாச்சுனா எழுந்து போக வேண்டியது தானே?’ சர்வர் வந்து அதட்டியும் விழிக்க வில்லை கேசவன்.

இன்னொருவர் வந்து பார்த்து, ‘என்னடா இவர் முகம் நீலமா இருக்கு? பதறிப்போய், ‘மொதலாளி... என்று அலற, மறுபடியும் கூட்டம் சேர்ந்தது. டாக்டர் அழைக்கப்பட்டார்.

‘யார் இவர்?"

‘தெரியலை டாக்டர்!"

‘ஸாரி. இவர் உயிர் பிரிஞ்சு, ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது !"

‘இது போலீஸ் கேஸ் !"

‘டிபன்ல கலப்படம்" என்றது ஒரு குரல்!

‘யாரையும் வெளில விடாதே!"

அவரவர் அபிப்பிராயங்களைச் சொல்ல, கல்லாவை நெருங்கி, வெகு சுவாதீனமாக ஒருவர், போலீசை அழைத்தார் டெலிபோனில்.

பத்தாவது நிமிடம் இன்ஸ்பெக்டர் தொப்பி ஒன்று பிரவேசிக்க,

‘யாரும் சாப்பிடாதீங்க... எல்லாத்தையும் லேபுக்கு அனுப்பணும்! இவர் சாப்பிட்ட மீதி சப்பாத்தியைச் சேகரி?"

‘வெளிக் கதவைச் சாத்துங்க!" பொது ஜனம் முணுமுணுக்க,

ஓட்டல் முதலாளி பீதியின் உச்சத்தில் இருக்க போலீஸ் தன் வேலையை ஆரம்பித்தது. அதேசமயம் –

புல்லட்காரன், ஒரு லாட்ஜின் முன்னால் வண்டிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தோல் பையைச் சுமந்தபடி உள்ளே நுழைந்தான். பக்கவாட்டில் படிகள் மேலே போக, உச்சிக்கு வந்தவன், நீள் வரிசையில் அறைகள் அமைந்திருந்த அந்தக் காரிடாரில் நடந்தான் வேகமாக.

34.

நின்று கதவைத் தட்டினான்.

‘யாரது?" உள்ளேயிருந்து குரல் வந்தது.

‘நான்தான் தலைவரே!" ஒரு தோல் பையை பவ்வியமாக நீட்டினான் ஜான்.

‘கதவைச் சாத்திட்டு வா."

வந்தான்.

ஜிப் திறந்து, படுக்கையில் கொட்டினான். இருபது கட்டுகள் சிதற, ஜான் வாய் பிளந்தான்.

‘நான் சொன்னபடிதானே செஞ்ச?"

துல்லியமா நடந்தது தலைவரே!"

‘கிழவன்?"

‘சயனிக் ஆஸிட் ஸ்ப்ரே, கிழவனை எமன் வீட்டுக்கு அனுப்பியிருக்கும் இந்நேரம். நம்ம பையன் வலிப்புல தூள் கிளப்பிட்டான்."

போலீஸ் ஹோட்டலுக்கு வந்திருக்கும். சாப்பாட்டுல கலப்படம்னு கதை திரும்பும். கிழவனோட டிபன்ல கொஞ்சம் ஸ்ப்ரே செஞ்சியா?"

‘செஞ்சிட்டேன் !"

‘குட். ஊர்ஜிதமாயிரும். போன மாசம் பேங்க் மானேஜர்கிட்ட, கிழவன் பேசும்போது தற்சமயம் நான் அதைக் கேட்க நேர்ந்தது. ஒரு மாசமாப் போட்ட திட்டம் இது."

பணத்தை ஆசையுடன் அள்ளினான் அவன்.

அவனைப்பற்றி மூன்றாவது அத்தியாய தொடக்கத்தில் வர்ணித்துக் கொள்ளலாம்.

அவன் தான் இந்தக் கதையின் நாயகன்.

‘உட்காரு ஜான்!"

‘இல்லை தலைவரே! நான் அவசரமாப்போகணும்!"

சிகரெட்டை ஆஷ்டிரேயில் நசுக்கியபடியே, ‘சரி நீ புறப்படு ஜான்."

‘தலைவரே..." ஜான் தயங்கினான்.

‘ஓ... உன் பங்கா?"

‘ம் !"

‘முப்பதாயிரம் போதுமா? மூணு லட்சம் வேணுமா?" அந்த ஜான் புரியாமல் விழித்தான்.

‘என்ன உளர்றேன்னு பாக்கறியா? முப்பது போதும்னு நீ நினைச்சா

Enjoying the preview?
Page 1 of 1