Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mella Poi Pesu
Mella Poi Pesu
Mella Poi Pesu
Ebook95 pages54 minutes

Mella Poi Pesu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts. Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
LanguageUnknown
Release dateMay 6, 2016
ISBN6580100900948
Mella Poi Pesu

Related categories

Reviews for Mella Poi Pesu

Rating: 4.75 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mella Poi Pesu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    மெல்லப் பொய் பேசு!

    Mella Poi Pesu!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    "உ

    ன்கிட்ட ஸ்வெட்டர் இருக்கா?"

    இல்லடி, ரெண்டு வருஷம் முன்னாடி ஒண்ணுவச்சிருந்தேன் இப்ப அது சேர மாட்டேங்குது.

    சேராது தான் குறிப்பா முதல் மூணு பட்டன் போடவே முடியாது. நாங்கதான் பார்க்கறமே. ஒரு மாசத்துக்கு ஒரு தடவை உன் ஜாக்கெட் எல்லாம் பிரிச்சி தச்சிக்கிறியே.

    உதை விழும் ராஸ்கல்!

    உன் லவர் பாய்கிட்டே கேமிரா வாங்கிக்கணும்னு சொன்னியே. வாங்கினியா? சோன்பப்டி மாதிரி தலை! பேரென்ன? விஷ்ணுகுமாரா?

    நீங்க இப்படி எல்லாம் அவரை கிண்டல் செஞ்சா வாங்கின கேமிராவைத் திருப்பிக் கொடுத்திடுவேன்.

    மைகாட்! ஸாரிடி. அம்பிகாவுக்கு மீசை வரைஞ்சி, வேஷ்டி கட்டி ஒரு போட்டோ எடுக்கணும்னு பிளான் எல்லாம் இருக்கு. கவுத்துடாதே.

    அது சரிடி சரளா, உன் மாமா கரெக்ட்டா நமக்கு காட்டேஜ் புக் பண்ணியிருப்பாரா? அங்கே போய் லாட்ஜ் லாட்ஜா அலைய விட்டுடப் போறே.

    ஏய்…என் மாமா ஊட்டில எவ்வளவு பெரிய ஆள்ன்னு புரியாம பேசறீங்க. அவர்கிட்ட சொந்தமா ஏழு குதிரை இருக்கு.

    லேக் ஓரத்தில் குழந்தைகளை உக்கார வச்சி காசு வாங்குவாங்களே, அந்த குதிரைங்க தானே?

    செருப்படி விழும், ஏழும் ரேஸ் குதிரைகள். இது வரைக்கும் தோல்வியே சந்திக்காத குதிரைகள். அதில ஒரு குதிரையோட விலை நாலரை லட்சம் தெரியுமா?

    அவளுக்கு குதிரையைப் பத்தி எதுவும் தெரியாது. விடுடி. இப்ப டூத் பேஸ்ட், சோப் எல்லாரும் எடுத்துக்கிட்டுப் போயாகணுமா? யாராச்சும் ஒருத்தி எடுத்துக்கிட்டா போதாது?

    போதும்.

    அதே மாதிரி பவுடர், சீப்பு?

    அதுவும் யாராச்சம் எடுத்துக்கிட்டாப் போதும்.

    அப்புறம் பிரா?

    அதுவும்…. ஏய்! திமிராவே பேசிட்டிருக்கே என்ன?

    தோழிகளின் உற்சாகமான பயண ஏற்பாடுகளை தனது கட்டிலில் ஒருக்களித்து படுத்தபடி ரசித்துக் கொண்டே கையில் ஆங்கில நாவலைத் தாங்கியிருந்தாள் மோகினி.

    ஜன்னல் வழியாக பெங்களூர் குளிர் காற்று அவள் கூந்தலின் பிசிறுகளை மென்மையாகத் தாலாட்டிக் கொண்டிருக்க… மோகினியை க்ளோஸப்பில் வர்ணிக்கலாம் கவிழ்ந்த தோழிகளாய் குண்டுக் கண்களில் அட்டேன்ஷன் சொன்னதைப் போல் நிமிர்ந்து வரிசை தப்பாமல் நிற்கும் விரைப்பான இமை முடிகள், புருவங்கள் ட்வீஸ் செய்யப்பட்டு மத்தியில் வெள்ளரி விதை அளவில் ஒரு சிகப்புப் பொட்டு. அந்த கூரான நாசிக்காக திரையுலகம் கட்டுக் கட்டாக நாசிக் காகிதங்களைக் கொட்டத் தயாராகி விடும். இயற்கையாகவே லோசான ஈரமும், மினுமினுப்பும் கொண்ட வெட்டி எடுத்து ஒட்ட வைத்ததைப் போன்ற உதடுகள், அவை திறந்து ஓடும்போது பளீர்! பளீரிடும் பற்கள். குபுக் என்று உப்பி வழிந்த கன்னங்கள். தொட்டு ஒரு முறை அசைக்கலாமா என்று தூண்டும் கச்சிதமான மோவாய். டைட் குளோஸப்பில் அவ்வளவு தான்.

    ஏண்டி மோகினி, எவ்வளவு நேரம் தான் புத்தகம் படிச்சிட்டிருப்பே, நீ உன் சூட்கேஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா? காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வேன் வந்துவிடும்.

    பெங்களூரே குளிராத்தானே இருக்கு? அவசியம் நாம ஊட்டிக்குப் போகணுமா? என்றாள் மோகினி எழுந்து அமர்ந்து.

    சாத்துடி அவளை! பதினைஞ்சிநாளா பேசிப்பேசி ஒவ்வொருத்தியா கரைச்சி சம்மதிக்க வச்சி ப்ளான் போட்டிருக்கேன். இப்ப வந்து போகணுமான்னு கேள்வி கேக்கறே நீ? ஒரு மாசமா ராப்பகலா கண் விழிச்சி பரிட்சை எழுதியிருக்கோம். நம்ம டென்ஷனுக்கு ஒரு வடிகால் வேணாமா? ரெண்டு மாசம் வெக்கேஷன்ல நாமெல்லாம் பிரிஞ்சிருக்கப் போறோம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஜாலி ட்ரிப்? அஞ்சி நாள் தானே? ஊட்டிலேர்ந்து எல்லாரும் பிரிஞ்சி அவங்கவங்க ஊருக்குப் போய்டப் போறோம்.

    நான் எங்கயும் போகலை அனிதா என்றாள் மோகினி.

    பின்னே? பெங்களூர்லயே இருந்து என்ன செய்யப் போறே?

    பார்ட் டைம் வேலை ஒண்ணுக்கு சொல்லி வெச்சிருக்கேன். கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்து படிக்கலாம்னு இருக்கேன். மெட்ராஸ்ல தாத்தா வீடு ஒண்ணுதான் எனக்குப் போக்கிடம். அங்கே ஒரே போர். வீட்ல யாரும் இல்லை. மெட்ராஸ் க்ளைமேட்டும் எனக்கு ஒத்தாகாது. வெயில் ஜாஸ்தி. அதனாலதான் இந்த ஏற்பாடு. ஹாஸ்டல்ல தங்கிக்க வார்டன்கிட்ட பரிமிஷன் வாங்கிட்டேன்.

    அதை விடு. எங்களோட ஊட்டிக்கு வரப்போறியா இல்லையா?

    நான் வர்றேன். சும்மா கேட்டேன் என்ற போது

    Enjoying the preview?
    Page 1 of 1