Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivantha Megangal
Sivantha Megangal
Sivantha Megangal
Ebook70 pages24 minutes

Sivantha Megangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த புதினத்தில அரசியலில் சேர்வதற்காக ஒரு இளம்பெண் பிரபலமாகிட அரசியலுக்கு வருகிறார். அவளை தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒரு எம்.எல்.ஏ எவ்வாறு உபயோகப்படுத்திக் கொள்கிறார் என்பதையும் அதனால் அவள் மனம் உடைந்து தன் உயிரே மாற்றிக் கொள்ளும் போது அவருடைய அண்ணன் பழிவாங்க. ஏறக்குறைய தெளிவான முயற்சியோடு ஈடுபடுவதை நவீனத்திலே மிக அழகாக சொல்லித் தருகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580178311073
Sivantha Megangal

Read more from Rajakai Nilavan

Related to Sivantha Megangal

Related ebooks

Related categories

Reviews for Sivantha Megangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  Book preview

  Sivantha Megangal - Rajakai Nilavan

  C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

  https://www.pustaka.co.in

  சிவந்த மேகங்கள்

  Sivantha Megangal

  Author:

  இரஜகை நிலவன்

  Rajakai Nilavan

  For more books

  https://www.pustaka.co.in/home/author/rajakai-nilavan

  பொருளடக்கம்

  முதல் அத்தியாயம் – பழனியும் துப்பாக்கியும்

  இரண்டாம் அத்தியாயம் - கிருஷ்ணன் வீடு

  மூன்றாவது அத்தியாயம் - கையில் துப்பாக்கி

  நான்காம் அத்தியாயம் – மும்பை பயணம்

  ஐந்தாம் அத்தியாயம் – மும்பை முயற்சி

  ஆறாம் அத்தியாயம் - இரயிலில் மந்திரி வலம்புரி மாதவன்

  ஏழாவது அத்தியாயம் – நதியின்மேல் இரயில்

  எட்டாவது அத்தியாயம் - மந்திரியும் பழனியும்

  ஒன்பதாவது அத்தியாயம் - இன்னும் பயம் போகலையா?"

  பத்தாவது அத்தியாயம் - கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்

  பதினொன்னாவது அத்தியாயம் - தமிழகத்தின் விடிவிளக்கே!

  பனிரெண்டாம் அத்தியாயம் – பிஸினஸ் கிளாசில் ஒரு டிக்கெட்

  பதிமூன்றாவது அத்தியாயம் - நதியில் வெள்ளம்

  முதல் அத்தியாயம் – பழனியும் துப்பாக்கியும்

  பழனி ரயில்வே நிலையத்தில் அங்கும் இங்கும் பார்த்தப்படி நின்றுகொணடிருந்தான். இரவு எங்கும் இருட்டை அப்பிவைத்திருந்தது.

  ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்த விளக்குகள் இருட்டை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தன. பனி விழுந்து தூரத்தில் நின்று கொண்டிருந்த மரங்களின் இலைகளில் நீர் முத்துக்கள் விளைவித்துக்கொண்டிருந்தன. ரயில் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது.

  தன்னையும் அந்த பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு நாயையும் தவிர

  அந்த இரயில்வேஸ்டேஷனில் யாரும் தென்பட்டதாகத் தெரியவில்லை பழனிக்கு.

  கொஞ்சம் பனி அதிகமாக விழ ஆரம்பிக்க தன் பெட்டியைத் திறந்து மப்ளரையும், ஸ்வெட்டரையும் அவன் எடுத்துக்கொண்ட போது உள்ளே இருந்த சிறிய கைத்துப்பாக்கி பளப்பளத்தது.

  வேகமாக சூட்கேஸை மூடிவிட்டு ஸ்வெட்டரை அணிந்து கொண்டு அருகேயிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்த போதுதான் அவர்கள் இருவரும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

  பழனி எழுந்து பார்த்தபோது ஒருஆணும் பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வருவது தெரிந்த்து. அருகில் வரும் போது தான் தன் ஊரிலிருந்து தங்கபாலுவும் கோமதியும் வருகிறார்கள் என்று புரிந்தது.

  பழனியை இரயில்வே நிலையத்தில் பார்த்ததும் இருவரும் திகைத்துப் போய் நிற்க பழனி எழுந்து வந்து தங்கபாலுவிடம் அரசல்புரசலாககேள்விப்பட்டேன். ஆனால் நீங்கள் ஓடிப்போகிற அளவிற்கு காதல் வளர்ந்து விட்டது என்று தெரியாது. அது சரி எங்கே போகலாம் என்று உத்தேசம் என்று கேட்டான்.

  என்ன செய்யட்டும்? எங்க அப்பன் ஆத்தாவிற்கு நான் கோமதியைக் கல்யாணம் பண்ணிக்கணும்ணா பிடிக்கலை. அவளோட அண்ணனும் மூக்கனுக்குத்தான் கோமதியைக் கட்டி வைப்பேன்னு ஒத்தக்காலிலே நிற்கிறான். வேறவழியில்லை. ஆமா பழனி நீ எங்கே இந்த ராத்திரியிலே கிளம்பியிருக்கிறாய்?

  மெட்ராஸிற்கு.

  என்ன விசயம். அதுவும் உன்தங்கை இறந்து நாலு நாள் கூட ஆவல்ல. உங்க அம்மாவிற்கு ஆறுதல் சொல்ல வேற யாரு இருக்காங்க?

  கொஞ்சம் அவசரமாக ஒரு சொந்த வேலையை முடிக்கணும். அது தான் அம்மா கிட்ட சொல்லாமல் கிளம்பிட்டேன். என்று பல்லைக் கடித்துக் கொண்டே சொன்னவன் தன் கோபத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் எங்கே போகிறாய். இனி கோமதியை கூட்டிக் கொண்டு போய் என்ன செய்யறதா உத்தேசம்?

  வேற எங்கபோறது. கழுதை தேஞ்சா கட்டெறும்புதான். மெட்ராஸில் நம்ம மச்சானுக, சகலபாடி கிருஷ்ணன் கொறுக்குப்பேட்டையிலே இருக்கான். போயி அவனப் புடிச்சு மொதல்ல ஏதாவது ஒரு கோயில்ல கோமதியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்.கெட்டும் பட்டணம் போன்னு பெரியாட்கள் சொன்ன மாதிரி நம்மோட எஸ்.எஸ்.சி சர்டிபிகேட்டை வச்சிகிட்டு வேலை தேட வேண்டியதுதான். நீ எங்கே தங்கப் போறே.

  எனக்கு மெட்ராஸ்லே ஒருத்தரையும் தெரியாது. அது தான் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

  "நீ ஒண்ணு

  Enjoying the preview?
  Page 1 of 1