Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jothida Ragasiyangal
Jothida Ragasiyangal
Jothida Ragasiyangal
Ebook983 pages5 hours

Jothida Ragasiyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோதிட ரகசியம் இந்த பதிப்பில், ஜோதிடத்தின் அனைத்து விதிகள், அதன் சாராம்ங்கள், விஷயங்கள் ஆகியவற்றை விரிவாய், ஆராய்ந்து அனுபவ பூர்வமாய், உதாரண ஜாதகங்களுடன் தரப்பட்டுள்ளது. சாரம் - பார்வை-பரிவர்த்தனை நீசம் உச்சம் பஞ்சவித ஸ்தானங்கள் - என்று இன்னும் இன்னும் உள்ள ஜோதிடத்தின் அனைத்து பக்கங்களையும் விரிவாய் விவரித்து உங்கள் முன் சமர்பிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580165609792
Jothida Ragasiyangal

Related to Jothida Ragasiyangal

Related ebooks

Reviews for Jothida Ragasiyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  Book preview

  Jothida Ragasiyangal - Janaki Manuvithyaa

  C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

  https://www.pustaka.co.in

  ஜோதிட ரகசியங்கள்

  Jothida Ragasiyangal

  Author:

  ஜானகி மனுவித்யா

  Janaki Manuvithyaa

  For more books

  https://www.pustaka.co.in/home/author/janaki-manuvithyaa

  பொருளடக்கம்

  நலமெல்லாம் தரும் குருபகவான்

  ஸ்ரீ சக்ரம்

  கிரக பல நிர்ணயம்

  கேந்திராதிபதிகள்

  கோணாதிபதிகள்

  பஞ்சவித ஸ்தானங்கள் உபஜெயம்

  அபோக்லிம ஸ்தானங்கள்

  செல்வ செழிப்புக்கு உதவும் பணபர வீடுகள்

  நவாம்சம்

  திசா நாதர்கள் தரும் பலன்கள்

  நடப்பு தசாபுத்திகளுக்கு ஏற்ப தான - தர்மங்கள்

  மனிதனின் கர்மாக்கள்

  பிறப்பு ஜாதக சனியும் கோட்சார சனியும்

  வக்கிர நிலையில் கிரகங்கள் தரும் பலன்

  பாவத்துக்கு பாதகம்

  யோகங்கள்…

  மங்களன் அளித்திடும் மகத்தான பலன்கள்

  தாரா பலம்

  நேத்திர கிரகங்கள்

  2-ம் இட புதனும் வாக்குபலமும்

  3-ம் இட குருவும் சொத்து இழப்பும்

  உச்சனை உச்சன் பார்த்தால்…

  பாதகாதிபதிகள்

  6-ம் இட சம்பந்தம் பெறும் செவ்வாயும், கடன் பிரச்சினைகளும்

  சூரிய, சந்திர இணைவு, சம்பந்தம்

  சுக்கிரனின் சூட்சுமங்கள்

  ஜோதிட முத்துக்கள் சில…

  பஞ்சக துருவம்

  (6 + 8-ம் பாவம் ஓர் ஆய்வு)

  சாரபலம்

  மகிழ்வான இல்லத்திற்கு மணப்பொருத்தங்கள்

  பார்சுனா யோகம்

  தர்மகர்மாதிபதி அமைப்பு

  இருதய நோய்

  கூட்டு பிரமிடு முடிவு

  எதிரிடை நட்சத்திரப் பலன்கள்

  தொழில் ஸ்தானாதிபதிகள்

  பாவத்துக்கு பாதகம்!

  கெட்டவன் கெட்டிடில்

  நேத்திராதிபதிகள்

  திடீர் விபத்துக் கண்டம்

  நவகிரக வழிபாடுகள்

  வெற்றி தரும் 10-ம் பாவம்

  கர்மத்தின் வெளிபாடு

  கால புருஷ நிலையில் 1-7 இடம்

  கிரகச்சேர்க்கைகள்

  நிபுண யோகம்

  நீச பரிவர்த்தனை

  பாசகன் - காரகன் – போதகன் – வேதகன்

  கால சர்ப்ப தோஷம்

  ஜல கண்டம்

  துர்மரணம்

  இடையில் வரும் உடற்குறைகள்!

  கலப்பு மணம் புரியும் ஜாதகர் யார்?

  சுபர்கள்

  காணாமல் போன உறவுகள்

  மாரகாதிபதிகள்

  பிறவிக் குறைகள்

  12 – ம் இடச் சனியும் கால்களும்

  பார்வைகள்

  அடுத்த வீட்டு கிரகங்கள் தரும் யோகம்

  பாலாரிஷ்டம்

  சந்திரன் தரும் யோகங்கள்

  சனி, செவ்வாய் இருவரின் ஒருமித்த பார்வை பலம்

  நீதிமன்றம் செல்லும் நிலை…

  காதல் திருமணம்

  லட்சுமி விஷ்ணு ஸ்தானங்களின் சம்பந்தம்…

  ஆளும் கிரகங்கள்

  அறம், பொருள் இன்பம்

  திருமண காலம் ஓர் ஆய்வு

  சில ஜோதிட குறிப்புகள்

  உச்சனை உச்சன் பார்த்தால்…

  சுவீகார யோகம்

  வெளிநாடு செல்லும் யோகம்

  பலன்களை தடை செய்யும் பகை கிரகங்கள்

  வலது பக்க இருதயம்

  மங்களன் அளிக்கும் மகத்தான பலன்கள்

  நவகிரகங்களும், நவரத்தினங்களும்

  மனம் – மூளை பாதிப்பு

  சகடயோகம்

  பூர்விக புண்ணிய தோஷங்கள்

  காரக பலம்

  ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’

  பரிவர்த்தனைகள்

  திருமணப் பொருத்தத்திற்கு தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

  இந்திரியம்

  சாரமே ஆதாரம்

  மிருத்துயு பாகை

  வித்யாரம்பம்

  கால சக்கிர திசை

  அஷ்டவர்க்கம்

  கர்ப்ப தானம்

  நலமெல்லாம் தரும் குருபகவான்

  "குரு ப்ரம்மா குருவிஷ்ணு குரு தேவோ மஹேஷ்வரகா

  குரு ஸாஷ்க்ஷாத் பரம் ப்ரம்மா தஸ்மை

  ஸ்ரீ குரவே நமஹ"

  நலம் தரும் குருபகவான் நவகோள்களில் மிகவும் சக்தி பெற்றவர். அவர் பார்வையாலே அனைத்து பாவங்களையும் போக்குபவர். தேவர்களுக்கு குரு என்பதால் தேவகுருவானார் ஆங்கீரசரிஷி, சிரத்தா தேவி இவர்களின் மகன், இவர் மனைவி தாரை. சுபக் கோள்களில் முதன்மை பெற்றவர். கிரஹங்களிலேயே பெரிய கிரகம் குரு. இக்கிரகம் பூமியிலிருந்து சுமார் 47 கோடியே 56 லட்சத்து 9200 மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. இதன் பரப்பளவு 8800 மைல்கள் ராசிச் சக்கரத்தில் தனுசு, மீனம் இவரது ஆட்சி வீடாகும். கடகத்தில் உச்சமும் மகரத்தில் நீசமும் பெறுவார். இவர் பார்வை பெற்ற பாவங்களும், கிரஹங்களும் பலம் பெறும். குரு ஜாதகத்தில் 1, 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் இருந்தால் முழுமையான சுபத்தன்மையை அளிப்பார். மற்ற 3, 4, 6, 7, 8, 12 இடங்களில் இருந்து அசுபரால் பார்க்கப்பட்டால் அவரால் கெட்ட பலன்களே ஏற்படுகின்றன. ஆனால், குரு கருணை உள்ளம் உடையவர் அவரை மனம் தளராமல் வணங்குபவர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்குவார்.

  குரு பரிகாரம்:

  குரு காயத்ரீ

  வியாழ தேவதை விஷ்ணு கருடன் ஜபம் தினம் 1900 முறை

  "ஓம் அச்வத் வஜாய வித்மஹே

  க்ருணி ஹஸ்தாய தீமஹி

  தந்நோ: குரு ப்ரசோதயாத்!

  அவரவர் ஜென்ம நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய அன்று குரு காயத்ரீ வரைந்து குரு மந்திரம் சொல்லி பூஜித்து தங்க விக்ரகம், மஞ்சள் சந்தனம், குதிரை, புஷ்பராகக்கல் மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, முல்லைபூ இவைகள் தானம் செய்தால், குருவினால் ஏற்படும் சகடயோகம், கேந்தராதிபத்ய தோஷம், கோசாரத்தில் அசுப ஸ்தானத்தில் குரு வரும் காலம் போன்ற வியாழ தோஷங்கள் நீங்குகின்றன. அரச மரசமித்தினால் ஹோமம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும். தினமும் நெற்றியில் சந்தனம் அணிந்து குரு காயத்ரீ சொல்லிவர கெடு பலன்களின் கடுமை குறைகிறது. விவாகத் தடையும் நீங்கும்.

  எண் கணிதத்தில் குரு:

  குரு பகவானுக்கு எண் கணிதத்தில் 3 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

  3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்ககாரர்கள். இவர்களிடம் குருவின் தன்மைகள் அதிகம் இருக்கும் இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்கு கீழ்படிதல், கௌரவம், நாணயம், விடாமுயற்சி போன்ற நல்ல குணங்கள் அமையப் பெற்றிருப்பார்கள். இவர்களில் பலர் மத போதகர்களாகவும் சட்ட நிபுணர்களாகவும், மற்றவர்களுக்கு தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். பேச்சில் கண்ணியமும், கண்டிப்பும் இருக்கும். தனக்காக உழைப்பதைக் காட்டிலும் மற்றவர்களுக்காக அதிகம் உழைப்பார்கள். தாராள மனம் படைத்தவர்கள். குரு தனகாரகன் என்பதால் இவர்களில் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக இருப்பார்கள்.

  12-பாவங்களில் குரு நின்ற பலன்:

  1-ல் சிறந்த அறிவும், சாஸ்திர ஞானமும் ஏற்படும். ஆயுள் விருத்தியும், அழகான, திடமான உடலமைப்பும் இருக்கும் நன் நடத்தை உண்டாகும். தனம், தானியம், பொன், நவரத்தினங்கள் சேரும்.

  2-ல் சொல்வன்மை மிக்கவர், தனம் தடையின்றி வரும். சிறந்த குடும்பம் அமையும். பெருஞ் செலவாளியாக இருப்பர். அமைதியான குணம்.

  3-ல் கஞ்சத்தனம் மிக்கவர், மனோதைரியம் உண்டாகும். சகோதர பாக்கியம் கிடைக்கும். பயமும் சந்தேகமும் ஏற்படும். எழுத்து விளம்பரத்துறையில் ஆர்வம் ஏற்படும்.

  இவர் சேர்க்கும் தனம் இவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அவரின் பிள்ளைகளுக்கு கிடைக்காது.

  4-ல் உயர்ந்த கல்வி, தாய்க்கு சுகம், கால்நடைகள் அதிகம், சந்திரனுடன் கூடியிருந்தால் புதையல் கிடைக்கும். கேந்திராதிபத்திய தோஷமில்லாதிருக்க வேண்டும். இல்லையெனில் கெடு பலன்களே நடக்கும்.

  5-ல் ஸ்திரமான புத்தி உண்டாகும். வேதங்கள் சாஸ்திரங்கள் கற்பர், சூதாட்டபிரியர் வெற்றியும் காண்பார். குரு பக்தி உண்டு. புத்திர கிலேசமாகும்.

  6-ல் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். ஜோதிடம் கற்பர். மந்திரம், தந்திரம் அறிவர். எதிரிகள் இவரிடம் அடங்கிப் போவர் வாத நோய்கள் ஏற்படும்.

  7-ல் மனதுக்கேற்ற களத்திரம் அமையும். வாகன வசதிகள் ஏற்படும். புத்திக்கூர்மை உள்ளவர். புத்திர பாக்கியம் தடைபடும். மிகவும் குண்டானவர்களாக இருப்பர். திருமணத்தின் மூலம் செல்வம் சேரும்.

  8-ல் நீண்ட ஆயுள் உடையவர் புத்திர அரிஸ்டம், தீய பழக்கங்களினால் ஒழுக்கம் பாதிக்கும். திடீர் தனவரவு ஏற்படும். பிற பெண்களிடம் மோகம் கொள்ளுவர்.

  9-ல் பிதுர் பாக்கியம் கிட்டும். புகழ் மிக்க வாரிசுகள் உருவாகும். எல்லோருக்கும் புலனடக்கம் உள்ளவர். குணசாலி, பணிவு மிக்கவர்.

  10-ல் மதகுரு, வக்கீல், நீதிபதிகள், பண்டிதர்கள், ஆசிரியர்கள், பொது ஜன தொடர்புடைய தொழில்கள் அமையும். பூர்வீகச் சொத்து இருக்கும். உயர்ந்த உத்தியோகம் கிட்டும். அரசாங்க விருதுகள் கிடைக்கும் பேரும், புகழும் ஏற்படும்.

  11-ல் தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். இறையுணர்வு மிகும். பிறர் சொத்து வந்து சேரும். இசைத் துறையில் ஆர்வம் ஏற்படும் காரிய சாதனை புரிவர்.

  12-ல் தூர தேச பிரயாணம், துக்கம், தன நஷ்டம், நிலை மாற்றம் ஏற்படும் துறவியாவார். சூழ்ச்சி வலைகளில் மாட்டிக் கொள்ளுவர். சமூகக் கட்டுப்பாடுகளை மீறி நடப்பர்.

  குருவினால் ஏற்படும் யோகங்கள்:

  1. அரச யோகம்

  குருவும், சூரியனும் லக்னத்தில் அல்லது 11-ல் சேர்ந்து நிற்பது.

  2. கஜ கேசரி யோகம்

  சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் குரு நிற்பது

  3. அஷ்ட லக்ஷ்மி யோகம்

  இராகு 6-ல் நின்று குரு கேந்திரங்களில் நிற்பது.

  4. ஹம்ஸ யோகம்

  லக்னத்தில் குரு உச்சமாகி நிற்பது.

  5. கலாநிதி யோகம்

  2-ல் குரு ஆட்சி உச்சமாகி நிற்பது.

  6. குருமங்கள யோகம்

  செவ்வாயும், குருவும் கூடுவது அல்லது ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் நிற்பது.

  7. கோடீஸ்வர யோகம்

  கேதுவும் குருவும் கூடுவது அல்லது கேதுவின் பார்வை குருவிற்கு கிடைப்பது.

  உதாரணம் - 1

  Super Star Rajini

  அவர்களின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இடம் பெற்றுள்ளது. குருவும், கேதுவும், ஒருவர்க்கு மற்றவர் ஏழில் பார்வை சம்பந்தம். இதனால் இளமையில் கஷ்டங்களை அனுபவித்தாலும் மத்திம வயதில் கோடீஸ்வரராக முடிந்தது.

  உதாரணம் - 2

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்

  ஜாதகத்தில் லக்னத்திற்கு 11-ல் குரு சந்திரனுக்கு 11-ல் சூரியனும் நின்று ஒருவரை ஒருவர் பார்வை செய்வதால் அரச யோகம் ஏற்பட்டு இந்நாட்டின் பிரதமரானார். மேலும் செவ்வாய்க்கு கேந்திரத்தில் குரு அமர்ந்திருந்தால் குருமங்கள யோகம் ஏற்பட்டது.

  குறிப்பு:

  பரணி, பூராடம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்க்கு குரு திசை 6வது திசையாக வரும் இது கண்ட திசையாகும். இத்திசையில் மாரகம் ஏற்படும்.

  ஸ்ரீ சக்ரம்

  உலகில், உயிர்கள், இறப்பது பின் பிறப்பது பின் இறப்பது என்று சங்கிலி தொடர்பான நிகழ்வுகள் நடந்துகொண்டே உள்ளது.

  மனிதனின் பிறப்பும் முடிவில் இறப்பும் நிர்ணயிக்கப்பட்ட விதி. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழ்க்கை வாழ்ந்ததாக வேண்டும். அப்படி வாழும் காலத்தில் மனிதனுக்கு ஏற்படும், பிணி, பீடை, கஷ்டம், கண்டம், விபத்து, மனமயக்கம் போன்ற துன்பங்களில் இருந்து விடுபட்டு சுகம்பெற நம் முன்னோர்களான தெய்வ ரிஷிகள் மணி, மந்திரம், ஔஷதம் என்ற 3 மஹா மகத்துவங்களை விட்டுச் சென்றுள்ளார்கள். மணி என்பது நவரத்னங்களாகும். இது செல்வம், வளர்ச்சி பெற உதவும், நோய் நீக்கும். ஔஷதம் என்பது, மருந்து ஆகும், நோய் தீர்ப்பது. மந்திரம் இது மந்திரம் - யந்திரம் என்று இருவழியால் பயன்தரும்.

  மந்திரங்கள் மூலம் ஹோம பூஜைகள் செய்து எல்லா பிரச்சனைக்கும் நிவாரணம் பெறலாம். அதேபோல பல்வேறு அட்சரங்கள் அதாவது யந்திரங்கள் உள்ளன. அதில் ஸ்ரீ சக்ரம் மகத்துவமான யந்திர சக்ரமாகும். ஸ்ரீ சக்ரத்தின் மகத்துவம் உணர்ந்த ஆதி சங்கரர் இந்தியா முழுதும் பல ஆலயங்களில் ஸ்ரீ சக்ரங்களை பதித்து அதன்மேல் அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

  ஸ்ரீ சக்ர தத்துவம்

  ஸ்ரீ சக்ரம் சக்தி வாய்ந்த மந்த்ர சக்ரமாகும். இப்பிரபஞ்சத்தின் மூலத்தை ஒருங்கே உணர்த்துவது ஸ்ரீ சக்ரமாகும். உடம்பானது உயிர்க்கு எப்படி நிலைகளனாக உள்ளதோ, அவ்வாறே சிவன் சக்தி இருவருக்கும் இருப்பிடமாக உள்ளது ஸ்ரீ சக்ரமாகும்.

  ஸ்ரீ சக்ரமானது கீழ்நோக்கிய 5 முக்கோணங்களும், மேல்நோக்கிய 4 முக்கோணங்களும் சேர்வதாக அமைக்கப்பட்டுள்ளது. மேல்நோக்கிய 4 முக்கோணங்கள் சிவனை குறிக்கும். இது சிவாத்மகம் எனப்படும் சிவாத்மக நான்கு முக்கோணங்களும், பிந்து அஷ்டதளம், ஷோடதளம் சதுர்சரம் என்றுபெயர். கீழ்நோக்கிய முக்கோணங்கள் சக்தியை குறிக்கும் இது சத்தியாத்மகம் எனப்படும்.

  சக்தியாத்மக ஐந்து முக்கோணங்களுக்கு, திரிகோணம், அஷ்டகோணம், தரசசுத்வயம் மன்வச்ரம் என்று பெயர். இதில் சக்தியாத்மக முக்கோணங்களின் சேர்க்கையால்தான் சிவாத்மக முக்கோணங்களுக்கு மேன்மை ஏற்படுவதாக ‘சிவ சக்த்யா யுக்தோ’ என்ற சௌந்தர்யலஹரி ஸ்லோகம் கூறுகிறது.

  சிவாத்மக 4 முக்கோணம், சக்தியாத்மக 5 முக்கோணம் ஆக 9 முக்கோணம் இணையும் மத்திய பாகம் பிந்து எனப்படும். ஸ்ரீ சக்ரத்தின் நடுவில் பிந்து ஸ்தானத்தில் நிஷ்களசிவமான காமேஸ்வரரும் காமேஸ்வரியும் இரண்டறக் கலந்து அபின்னமாய் வீற்றிருக்கின்றார்கள். ஸ்ரீ சக்ரத்தில் மொத்தம் 43 முக்கோணங்கள் உள்ளன. இந்த 43 முக்கோணங்களிலும் பிரபஞ்ச தத்துவங்களையும், மனோநிலைகளையும் குறிக்கும் ‘யோகினிகள்’ அமர்ந்துள்ளார்கள். இந்த யோகினிகளே ஆவரண தேவதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆவரண என்றால் மறைக்கும் என்று பொருள். பிந்து மண்டலத்தில் உள்ள பிரமம் ஸ்வரூபத்தை மறைத்து, பஞ்ச, பௌதீகப் பிரபஞ்சத்தை தோற்றுவிப்பவர்கள் யோகினிகளே.

  சூரியனிடமிருந்து கதிர்கள் தோன்றுவதுபோல தேவியிடம் இருந்து யோகினிகள் தோன்றுகிறார்கள். ஸ்ரீசக்ர நவாவரண பூஜை செய்யும்போது ஆவரண தேவதைகள் அம்மாளிடம் ஐக்கியமாகி விடுவதை காணலாம். பரப்பிரம்ம ஸ்வரூபிணி ஸ்ரீ சக்ர பிந்து ஸ்தானத்தில் அமர்ந்து அருள் பாலித்து வருகிறான்.

  ஸ்ரீ சக்ர பெருமை - பயன்கள்

  ஸ்ரீ சக்ர யந்த்ரத்தை முறையாய் அளவு முறைப்படி தங்கம், செம்பு வெள்ளியில் வரைந்து வீட்டில் வைத்து பூஜிக்கலாம். வியாபார ஸ்தலங்களில், நல்ல வசீகரத்தை தரும். ஸ்ரீ சக்ரத்தை பூஜிக்க தொடங்கினால், முதலில் வறுமை அகலும் புத்தி சீர்படும், வரும் துன்பங்களுக்கு உடனடி தீர்வுக்கிட்டும். நீடித்த புகழ், நிகரற்ற செல்வம் கிட்டும். கல்வி கேள்விகளில் முதன்மை பெற முடியும். சுருக்கமாய் சொன்னால் ஸ்ரீ சக்ரம் சகல சௌபாக்கியங்களையும் தரவல்லது. டாலராய் கழுத்தில் அணியலாம், அவப்புகழை நீக்கி நற்புகழ் தரும். சினிமா, அரசியல் என்று பொது ஜனவசிய தொழில்கள் புரிவோர்க்கு நல்ல புகழையும், செல்வத்தையும் ஸ்ரீசக்ரம் தரும். யந்திரத்தை வாங்கி வீட்டில் வைத்து பூஜிக்க முடியாதவர்கள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப சுப பலனை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

  ஸ்ரீசக்ரம் வைத்து முறைபடி நவாவரண பூஜை செய்யலாம். எளிமையாய், தினம் வீட்டில், லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம்.

  ஓம் ஸ்ரீசக்ர தேவ்யை சவித்மஹே

  நவாஷரி தேவ்யைச தீமஹி

  தன்னோ ஸ்ரீதேவி ப்ரசோதயாத்

  என்று தினம் 43 முறை ஜபித்துவரவும் நல்ல மேன்மையான பலன் அடையலாம். ஸ்ரீசக்ர நாயகியான கொல்லூர் மூகாம்பிகையை தொடர்ந்து வணங்கி எம்.ஜி.ஆர் அவர்கள் எத்தனை புகழ் பெற்றார்கள் என்பது நாம் அறிந்ததே!. துன்பம் விலகி, செல்வம், செழிப்பு பெற விரும்பும் அனைவரும் வணங்கி நலம்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  சில ஸ்ரீ சக்ர சன்னதிகளின் பெயர்கள்.

  1. கொல்லூர் மூகாம்பிகா

  2. காஞ்சி காமாட்சி

  3. ஸ்ரீசைலம் பிரம்மராம்பிகா

  4. சிருங்கேரி சாரதாம்பா

  5. மாங்காடு காமாட்சி

  6. பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி

  7. திருவிடைமருதூர் மோகாம்பிகை

  8. புதுக்கோட்டை புவனேஷ்வரி

  9. திருவொற்றியூர் வட்டபாறை அம்மன் (வடிவுடையம்மன்)

  10. திருவானைகாவல், அகிலாண்டேசுவரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ரம் உள்ளது.

  11. சென்னை – காளிஹாம்பாள் (தம்புசெட்டிதெரு)

  12. திருவல்லிக்கேணி காமகலாகாமேஸ்வரி

  13. திருபேரூர் முருகன் சந்நிதி வலதுபுறத்தில் ஸ்ரீசக்ர மேடு உள்ளது.

  14. ரமணாஸ்ரமத்திலும் ஸ்ரீசக்ர மேடு உள்ளது.

  15. தாம்பரம் – தேனுகாம்பாள்

  16. நேப்பாளம் – குக்யேஸ்வரி

  17. திருச்சி மலைக்கோட்டை - சுகந்த குந்தளாம்பாள்

  18. காசி அனுமன் சட்டத்தில், சிவலிங்க உச்சியில் ஸ்ரீசக்ரம் உள்ளது.

  பெரும் பொருள் கொண்டு, நவாவரணயாக பூஜை அனைவராலும் செய்ய முடியாது. ஆயிரக்கணக்கான பணம் கொடுத்து முறையாய் ஸ்ரீசக்ர யந்திரம் வரைந்து வாங்கி, அதை முறைப்படி பூஜை செய்யவும் அனைவராலும் முடியாது. ஆனால், மேற்கூரிய சில ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களில் சென்று வழிபடுவதன் மூலம் சிவசக்தியின் முழுமையான சக்தியை அடையலாம், வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம் பூர்ணமாய் கிடைக்க அன்னையை வேண்டுகிறேன்.

  கிரக பல நிர்ணயம்

  நம்முடைய முன்வினை பயனை ஒட்டியே நன்மை தீமைகளை அனுபவிக்கின்றோம். ஜாதக வாயிலாக, நன்மை தீமைகளின் அளவு, தன்மை, அதை அனுபவிக்கும் காலம் ஆகியவற்றை நவகிரகங்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நவகிரகங்களும், தாம் பெற்ற பலத்தின் அடிப்படையிலேயே ஜாதகர்க்கு நன்மை, தீமைகளை வழங்க கடமைப்பட்டவர்கள். கிரகங்களின் பலத்தை நிர்ணயிக்க கடமைப்பட்டவர்கள். கிரகங்களின் பலத்தை நிர்ணயிக்க முன்னோர்கள் பல்வேறு விதிகளை விட்டுச் சென்றுள்ளார்கள்.

  1. ஸ்தான பலம்

  2. திக் பலம்

  3. க்ஷேஷ்ட பலம்

  4. கால பலம்

  5. திருக் பலம் அல்லது பார்வை பலம்

  6. நைஸர்க்கிக பலம்

  இந்த ஷட் வர்க்கங்களிலும் கிரகங்கள் பலம் பெற்றால், சுப பலனை கூடுதலாய் தருவார்கள். மேலும் சூட்சுமமாய்,

  7. சாரம்

  8. வர்கோத்தமம்

  9. வேதகம்

  10. திதி சூன்யம்

  11. வக்கிரம்

  12. அஸ்தமனம்

  13. அஷ்டவர்க்கம்

  போன்ற நிலையிலும் கிரகங்கள் கெடுபலன் தராத நிலையில் நின்றுவிட்டால் யோகம் பலன் உறுதிதான். இதன் மேலும், அதி சூட்சுமமாய் தசவர்க்கங்களிலும், சஷ்டியாம் சங்களிலும் கிரகங்கள் நின்று கூடுதல் பலம் பெற்றால் நாட்டின் தலைவராக்கும் அளவுக்கு யோகம் உண்டு. நம் பலன் துல்லியமாய் பார்க்க கிரகங்கள் இந்த 13 நிலையில் நிற்கும் பலத்தை ஆராய்ந்தாலே போதுமானதாகும்.

  I. ஸ்தான பலம்

  விதி: ஒரு கிரகம், ராசி, அம்சத்தில் நின்ற நிலையில் பெறும் பலம் ஸ்தான பலமாகும்.

  விளக்கம்: 1, 4, 7, 10-ம் இடங்கள் கேந்திரங்கள்

  1, 5, 9-ம் இடங்கள் கோணங்கள்

  3, 6, 10, 11-ம் இடங்கள் உபஜெயம்

  2, 5, 8, 11-ம் இடங்கள் பணபரம்

  3, 6, 9, 12-ம் இடங்கள் அபோக்லிமம் ஆகும்.

  கேந்திரங்களில் நின்ற கிரகங்கள், நற்பலனைச் செய்வார்கள். சுபர்களான குரு, புதன், சுக்கிரன், வளர் சந்திரன் கேந்திராதிபதிகளானால் கேந்திரத்தில் நின்றால் கெடுபலன் தருவார்கள்.

  பாவிகளான சனி, சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோர் கேந்திரத்தில் பலம் பெற்றால் சுப பலன் தருவார்கள்.

  1, 5, 9 ஆன கோணத்தில், சுபர்கள் முழுமையான சுப பலனும், பாவிகள் முழுமையான கெடு பலனும் தருவார்கள்.

  2, 5, 8, 11-ம் இடமான பணபரத்தில், சுபர், பாவியாராயினும் நின்றால், நல்ல செல்வ வளத்தை தருவார்கள். 3, 6, 10, 11-ம் இடமான உபசயத்தில், பாவிகள் முழுமையான சுப பலனையும் தருவார்கள். சுபர்கள், 3, 6, 10, 11-ல் ஆட்சி உச்சநிலையில் நின்றால் மட்டுமே யோகம் புரிவார்கள். பொதுவாய் எந்த கிரகம் உபஜயத்தில் நின்றாலும், சுய முயற்சியால் முன்னேறுவர். 3, 6, 9, 12-ம் இடமான அபோக்லிமத்தில் 3, 6, 12 மறைமுக வீடு 9-ம் இடம் மட்டும் கோணம் இருந்தாலும், இவை மிகவும் பலவீனமான பாவங்களாய் கொள்ளப்படுவதால், பிறர் தயவில் இப்பாவங்கள் வலுத்தால் வாழ நேரும்.

  காலபுருஷ நிலையில்,

  1, 5, 9 இடம், நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு, செவ்வாய், சூரியன், குரு, அதிபதியாவதால் இவர் பலம் பெறும்போது ராஜயோக பலன் நடக்கிறது.

  செவ்வாய், சந்திரன், சுக்கிரன், சனி கேந்திராதிபதிகளாய் வருவதால், இவர்கள், பலம் பெற்றால் நிரந்தரமான நன்மை தீமை தருவார்கள். ஆற்றல் மூலம் அந்தஸ்து தருவார்கள். சுக்கிரன், சூரியன், செவ்வாய், சனி பணபர அதிபதிகளாகவும் உள்ளதால் இதில் நிற்கும்போது நல்ல செழிப்பை உண்டாக்குவார்கள்.

  3, 6, 10, 11 உபஜெய அதிபதிகளாய் சனி, புதன் மட்டுமே வருவார்கள். இவர்கள் முயற்சியால் முன்னேற்றமும், சில அழிவையும் நிரந்தரமாய் தருவார்கள். 3, 6, 9, 12 அபோக்லிமம் அதிபதியாய் வரும் குரு, புதன் ஒருவர்க்கொருவர் பாதகாதிபதியாய் வருவதால் வெளிநாடு, சிறை வாசம் போன்ற பலவீன அமைப்பு தருவார்கள்.

  II திக் பலம்

  விதி: ஒரு கிரகம் குறிப்பிட்ட பாவத்தில் நிற்கும்போது அதீதமான திக் பலத்தை அடைகிறது.

  விளக்கம்: குருவும், புதனும் லக்னத்தில் நின்றாலும், சூரியனும், செவ்வாயும் 10-ம் இடத்தில் நின்றாலும், சனி 7-ம் இடத்திலும், சுக்கிரன் - சந்திரன் 4லும் நின்றால் திக் பலம் பெறுவார்கள். குறிப்பிட்ட இந்த இடங்களில் இந்த கிரகங்களுக்கு அதீதமான பலம் ஏற்படும்.

  சுப - அசுப பலன் எதுவானாலும் அதிகமாய் தருவார்கள்.

  மீன தனுசு லக்னங்களை தவிர, மற்ற லக்னங்களில் நிற்கும் புதன் சுப பலன் தருவார். மிதுன, கன்னி லக்னங்களை தவிர, மற்ற லக்னங்களில் நிற்கும் குரு சுப பலன் தருவார், மேஷ, கடக, கும்ப லக்னங்களுக்கு, 10-ல் ஆட்சி உச்ச நிலை பெறும் செவ்வாய் பூர்ண பலம் பெறுவார். மற்ற லக்னங்களுக்கு, பலன் சுமார்தான்.

  கடகம், தனுசு, விருச்சிக லக்னங்களுக்கு 10-ல் நிற்கும் சூரியன் பூர்ண திக் பலம் பெறுவார், மற்ற லக்னங்களுக்கு, சுமாரான பலன்தான்.

  சனி எந்த லக்னமாயினும், பாதக, மாரக ஆதிபத்தியம் சாரம் பெற்று நீசம், நீசாம்ச நிலையில் 7-ல் நின்றால் மாரகத்தையே தருவார். மற்ற நிலையில் 7-ல் பலம் பெற்ற சனிதான் தரவேண்டிய பலனை முழுமையாய் தந்துவிட்டே செல்வார்.

  கேந்திராதிபத்யம் பெறாத சுக்கிரனும், சந்திரனும் 4-ல் நின்றால், மட்டுமே சுப பலனை செய்வார்கள்.

  III க்ஷேஷ்ட்ட பலம் (or) சஞ்சார பலம்

  கிரகங்கள் சஞ்சரித்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கிடையே ஏற்படும், வக்ரம், அதிவக்ரம், அதிசாரம், அஸ்தமனம், ஸ்தம்பிதம் போன்ற நிலையில் பலம் பெற்று இயங்குவார்கள். அமாவாசை அன்று சூரியனும், பௌர்ணமியில் சந்திரனும் பூர்ண சஞ்சார பலத்தை அடைவார்கள்.

  விளக்கம்: சூரியனுக்கு 5, 6-ல் சனி, செவ்வாய், குரு ஆகியோர் வரும்போது வக்கிரமாவார்கள்.

  7, 8-ல் அதி வக்ரமாகி,

  9, 10-ல் வக்ர நிவர்த்தியாவர்,

  சூரியனை நெருங்கிய, கோள்களான சுக்கிரனும், புதனும் அடிக்கடி வக்ரமும், அஸ்தங்கமும் அடைவார்கள்.

  கும்பம், மீனம், மேஷம், ரிஷப ராசிகளில் புதன் சூரியனுடன் இணைந்தே இருப்பார்.

  மிதுன, கடக, சிம்ம, கன்னி ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும்போது புதன் சூரியனுக்கு முன்னால் சஞ்சரிப்பார்.

  துலா, விருச்சிக, தனுசு, மகர ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும்போது புதன் சூரியனுக்கு பின்னால் சஞ்சரிப்பார்.

  ராகு, கேதுவுக்கு வக்ர கதி இல்லை.

  லக்ன பாவிகள், நைசர்க்கிக பாவிகள் வக்ர நிலையில் சில சுப பலனை தருவார்கள்.

  நீச கிரகம் வக்ர நிலையில் உச்ச பலனையும், உச்ச கிரகம் வக்ர நிலையில் நீச பலனையும் செய்யும். சுபர்கள் வக்கிரம் பெற்றால் கெடுபலன் தருவார்கள். ஒரு ஜாதகத்தில், காரகர், ஸ்தானாதிபதி, ஆதிபத்ய நாதன் மூவரும் வக்கிரம் பெற்றால் கெடுபலன் அதிகமாக தருவார்கள். பாவ பலனில் ஒன்றை முற்றிலும் கெடுத்து விடுவார்கள்.

  சூரியனுக்கு அருகில் கிரகங்கள் சஞ்சரிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் அஸ்தங்க நிலையை பெறுவார்கள்.

  சூரியனுக்கு, 17 டிகிரியில் செவ்வாயும்,

  13 டிகிரியில் புதனும்,

  15 டிகிரியில் சந்திரனும், சனியும்,

  11 டிகிரியில் குருவும்,

  8 டிகிரிக்குள் சுக்கிரனும் சஞ்சரிக்கும்போது அஸ்தமனம் அடைவார்கள். அஸ்தங்கத்தில் கிரகம் தம் வலிமையை இழந்துவிடும். இதனால் சுபர் சுப பலனை தரமாட்டார். பாவர் பாவ பலனை தரமாட்டார்.

  ஸ்தம்பிதம் என்ற அமைப்பில், குறிப்பிட்ட சில கிரகங்கள் தம் சஞ்சார காலத்தையும் மீறி ஒரே வீட்டில் நின்று விடுவார்கள். உதாரணமாய் 45 நாட்களில் ராசியை கடக்கும் செவ்வாய் தற்போது ஆவணி 31 தொடங்கி மே 1 2008 வரை 11 மாதம் மிதுனத்திலே சஞ்சரிக்கிறார். இதுவே ஸ்தம்பிதமாகும். இந்த நிலையிலும் கிரகங்கள் பலனை முரண்படுத்துவார்கள். மேலும், ஒவ்வொரு கிரகமும் தன் உச்ச வீட்டை நோக்கி ஆரோகணத்தில், சஞ்சரிக்கும்போது சுப பலனை கூடுதலாய் தருவார்கள். நீச வீட்டை நோக்கி அவ ரோகத்தில் சஞ்சரிக்கும் போதும், சுப பலனின் அளவை குறைப்பார்கள்.

  IV கால பலம்

  விதி: கிரகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மாதத்தில் பெறும் பலம் காலபலமாகும்.

  விளக்கம்: சந்திரன், சனி, செவ்வாய் இரவிலும், குரு, சுக்கிரன் பகலிலும், புதன் எப்போதும் கால பலத்தை அடைகிறார்கள்.

  சுபர்கள் வளர்பிறையிலும்,

  அசுபர்கள் தேய்பிறையிலும் காலபலத்தை அடைவார்கள்.

  கிரகங்கள் தம் கிழமையிலும், மாதத்திலும், ஓரையிலும், காலபலத்தை அடைவார்கள்.

  V திருக் பலம் அல்லது பார்வை பலம்

  விதி: கிரகங்களின் பார்வை பலம், இது மற்ற கிரகங்களின் வலுவை கூட்ட அல்லது குறைப்பதில் முக்கிய பங்கு பெறும்.

  சுபர் பார்வை, கெடுபலன் குறைக்கும்.

  அசுபர் பார்வை, சுப பலன் குறைக்கும்.

  VI நைசர்க்கிக பலம்

  விதி: இயற்கையிலேயே ஒரு கிரகத்திற்கு உள்ள பலம், தன்மை நைசர்க்கிக பலம் எனப்படும்.

  விளக்கம்: ஒவ்வொரு கிரகமும், எந்த பாவத்தில் நின்றாலும், ஒரு குறிப்பிட்ட பலத்தை நிரந்தரமாய் உண்டாக்குவார்கள். சூரியன், சுக்கிரன், குரு, புதன், செவ்வாய், சனி என்று வரிசையாய் பலம் பெறுவார்கள். இதில் சூரியன் மிகுந்த பலமும் சனி பலவீன பலமும் உடையவர்கள்.

  பல கிரகங்கள் கூடி கிரக யுத்தத்தில் ஈடுபடும்போது, அவற்றின் பலத்தை நிர்ணயிக்க நைசர்க்கிக பலம் உதவும்.

  VII சார பலம்

  விதி: 12 ராசிகளில், 27 நட்சத்திங்களில் 108 பாதங்களில் கிரகம் நிற்கும் பாதமே சாரம் எனப்படும்.

  விளக்கம்: மேற்கூறிய ஷட் வர்க்கங்களில் ஒரு கிரகம் தம் உச்ச வீட்டில் நின்று அடைந்துவிட்டால், சுப பலனை காரகர்களுக்கு, சார பலம் மிகவும் முக்கியம். லக்ன யோகாதிபதிகளின் சாரம் பெற்ற கிரகம் பாவியானாலும் யோகமே செய்யும்.

  VIII வர்க்கோத்தம்

  விதி: ஒரு கிரகம் ராசியிலும், அம்சத்திலும் ஒரே வீட்டில் நிற்பது வர்க்கோத்தமம் எனப்படும்.

  விளக்கம்: சர லக்னங்களை மேஷ, துலா, மகர, கடக ராசிகளில் முதல் பாதத்தில் நிற்கும் கிரகம் வர்கோத்தமம் பெறும்.

  ஸ்திர லக்னங்களான ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப ராசிகளில் 5-ம் பாதத்தில் நிற்கும் கிரகம் வர்க்கோத்தமம் பெறும்.

  உபய ராசிகளான மீனம், தனுசு, மிதுனம், கன்னி ராசிகளில் 9-ம் பாதத்தில் நிற்கும், கிரகம் வர்க்கோத்தமம் பெறும்.

  வர்கோத்தம நிலையில், கிரகம் மிக பலமடையும். வர்கோத்தமம் பெற்ற கிரகத்தை, லக்னத்தை, 2-க்கும் மேற்பட்ட கிரகம் பார்ப்பது யோகமே. லக்னம், லக்னாதிபதி, சூரியன், சந்திரன் வர்க்கோத்தமம் பொதுவாய் சுப பலனே செய்யும்.

  IX வேதகம்

  விதி: கிரகங்கள் ஒருவர்க்கொருவர் ஒரு குறிப்பிட்ட பாவத்தில் நிற்கும்போது வேதகம் அடைவார்கள்.

  விளக்கம்: வேதகம் என்றால் தடைபடுதல், கெடுத்தல், என்று பொருள். ஒரு கிரகம் வேதக நிலையில் தான் தரவேண்டிய பலனை தடைபடுத்தி, முரண்படுத்தி தரும். கிரகங்களின் பலத்தை நிர்ணயிக்கும்போது, வேதக நிலை ஊன்றி கவனித்தல் வேண்டும்.

  1. சூரியனுக்கு, சுக்கிரன் வேதகன் என்றாலும், சூரியனுக்கு 11-ம் இடத்தில் நிற்கும் சுக்கிரனே அதிக கெடுபலன் செய்வார்.

  2. சந்திரனுக்கு சூரியன் வேதகன் என்றாலும், சந்திரனுக்கு 3-ல் நிற்கும் சூரியன் கெடுபலனை செய்வார்.

  3. செவ்வாய்க்கு, புதன் வேதகன். புதனுக்கு 3-ல் நிற்கும் செவ்வாய், அதிக கெடுபலன் தரும்.

  4. புதனுக்கும், செவ்வாய் வேதகன். செவ்வாய்க்கு 4-ல் நிற்கும் புதன் அதிகமான கெடுபலன் தருவார்.

  5. குருவுக்கு, சூரியன் வேதகன். குருவுக்கு 12-ல் நிற்கும் சூரியன் அதிகமான கெடுபலனை செய்வார்.

  6. சுக்கிரனுக்கு, சனி வேதகன். சுக்கிரனுக்கு 4-ல் நிற்கும் சனி அதிகமான கெடுபலனைச் செய்யும்.

  7. சனிக்கு, செவ்வாய் வேதகன். சனிக்கு 7-ல் நிற்கும் செவ்வாய் அதிகமான கெடுபலனை செய்யும்.

  இப்பலன்கள், இக்கிரகங்கள் திசை புத்தியில் நடைமுறைப்படும்.

  X திதி சூன்யம்

  விதி: ஒரு குறிப்பிட்ட நாளில், திதியில், குறிப்பிட்ட ராசியில் செல்லும்போது, திதி சூன்யம் அடைவார்கள். திதி சூன்யம் பெறும் பாவமும் கிரகமும் கெடுபலன் செய்யும், பௌர்ணமி அமாவாசைக்கு திதி சூன்யம் இல்லை.

  XI அஷ்டவர்க்கம்

  மேற்கூறிய 10 நிலையிலும் கிரகங்கள் பலம் பெற்றாலும், அஷ்டவர்க்கத்தில், பலம் பெறவேண்டும். கிரகம், தான் இருக்கும் ராசியில் 5, 6, 7, 7க்கும் மேலான பரல் பெறுவது யோகம்.

  0, 1, 2 பரல்கள் அதம பலன் மற்றும் தசவர்க்கம், ராசி முதல் சஷ்டியாம்சம் வரையான அம்சத்திலும் பலம் பெறும் கிரகமே பெரிய ராஜயோக பலனைச் செய்ய முடியும்.

  XII கிரக அவஸ்தை

  விதி: கிரகம் ராசியில் நிற்கும் நிலையில் சில நிரந்தர பலம் பெறுவர். இதை வடமொழியில் அவஸ்த்தை என்பர்.

  1. தீப்த அவஸ்தை: கிரகங்கள் உச்ச ராசியில் நிற்கும்போது. லாபம் நல்ல சந்ததி விருத்தி செல்வ செல்வாக்கு பெரியோர்களால், மதிக்கபடுதல் போன்ற சுப பலன் நடக்கும்

  2. சுவஸ்த அவஸ்தை: ஆட்சி வீட்டில் கிரங்கள் நிற்கும்போது புகழ் பதவி மகழ்ச்சி நிலம் சொத்து அமைதல் போன்ற பலன் நடக்கும்

  3. முதித அவஸ்த்தை: நட்பு வீட்டில் கிரகம் இருப்பது மத்திம பலன். கஷ்டமில்லா வாழ்வு.

  4. சாந்த அவஸ்த்தை: சுபருடைய வீட்டில் கிரகம் இருப்பது தைரியம், காரகவிருத்தி.

  5. பீத்ய அவஸ்த்தை: ஒரு ராசியில் கடைசி பாகையில் கிரகம் இருப்பது, கெடுபலன், கெட்ட நடத்தை, சிறை பயம். பலம்மிக குறைந்தால், ஆயுள் அற்பம்.

  6. தீன அவஸ்த்தை: பகை வீட்டில் கிரகம் நிற்பது. கெடுபலன், வியாதி, கடன், அவமானம், தூக்கம், நிம்மதி இல்லாமை.

  7. விகல அவஸ்த்தை: சூரியனுடன் ஒரே டிகிரியில் நிற்பது. வியாதி, அவமானம், குழந்தை இழப்பு, சொத்து இழப்பு.

  6. கல அவஸ்த்தை: நீச ராசியில் கிரகம் இருப்பது. பொருள் இழப்பு, தொழில் நஷ்டம். காரக பலன் விருத்தியில்லை.

  9. பீத அவஸ்த்தை: அதிசாரத்தில் கிரகம் இருப்பது. காரக வகையில் சுப – அசுப பலன், அதிரடியாய் நடக்கும். சுருக்கமாய் கூறினால்,

  உச்சகிரகம் - முழு பங்கு சுபம்

  ஆட்சி கிரகம் - முக்கால் பங்கு சுபம்

  நட்பு வீட்டில் - கால் பங்கு சுபம்

  பகை வீட்டில் - சுப பலன் இல்லை

  மேலும், நவாம்சத்திற்கு, அரை பங்கு பலம்

  தசாம்சத்திற்கு, கால் பங்கு பலம்

  துவசாம்சத்திற்கு, அரை பங்கு பலம்

  சோடசாம்சத்திற்கு, அரை பங்கு பலம்

  சஷ்டியாம்சத்திற்கு, கால் பங்கு பலம்

  இந்த அளவு முறைப்படியே கிரகம் தான் நின்ற, நிலைக்கு தகுந்தவாறு பலனைச் செய்வார்கள்.

  குறிப்பு:

  1. ஒரு கிரகத்தின் மூலத் திரிகோண வீடு எந்த ஆதிபத்யமாக வருகிறதோ, அப்பாவ பலனை அக்கிரகம் பலப்படுத்தும். மூலத்திரிகோண வீட்டில் நிற்கும் கிரகமும் சுப பலனையே செய்யும்.

  2. கேந்திராதிபதிகள், பாவிகள் ஆனாலும் சுப பலனையே செய்வார்கள்.

  3. சுப கிரகமோ, அசுப கிரகமோ யாராகிலும் கேந்திராதிபத்யம் பெறும்போது அதீதமான பலம் பெறுவர்.

  4. 3, 6, 8, 11-ம் வீட்டதிபதிகள் கெடுபலனையே உண்டாக்குவார்கள்.

  5. 2, 12-ம் அதிபதிகள், சுபர்களோடு சேர்ந்து சுப ஸ்தானத்தில் நின்றால், சுபம் நடக்கும்.

  6. அஷ்டமாதிபதி லக்னாதிபதியானாலோ, கோணாதிபதியானாலோ, சுபம் செய்வார்.

  7. ராகு, கேது இருவரும் சுபர்வீடு, சுபசாரம் சுபர் சேர்க்கை பெற்றால் மேலான யோகம் தருவர்.

  8. கேந்திர - கோணாதிபதிகளின் இணைவு ராஜயோகம் செய்யும்.

  9. கிரகம் நின்றராசிக்கு பாகைக்கு முன், பின் பாவிகள் இருந்தால், தன் பலனை முரண்படுத்தி கெடுக்கும்.

  10. ஒரு கிரகம் உச்சம் பெற்று அவ்வீட்டதிபதியும் உச்சமாகி, தன் வீட்டையும் அதில் உள்ள உச்ச கிரகத்தையும் பார்வை செய்தால், அக்கிரகமும் பாவமும் முழுமையான பலம் பெற்று தாம் தரவேண்டிய சுப, அசுப பலனை முழுமையாய் தந்துவிட்டே செல்லும்.

  ஆண்டவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவனை வணங்குகிறேன்

  கேந்திராதிபதிகள்

  லக்னத்திற்கு 1, 4, 7, 10 பாவங்கள் கேந்திரங்கள் ஆகும். இவ்வதிபதிகள் கேந்திராதிபதிகள் ஆவர். ஒவ்வொரு லக்னத்திற்கும் நான்கு கேந்திராதிபதிகளில் இருவர் நட்பு கிரகங்களாகவும், மற்ற இருவர் அவர்களுக்கு, எதிரித்துவம் பெற்ற நிலையில் உள்ளவர்கள் ஆவர்.

  கால புருஷ நிலையில்,

  சர ராசிகளான மேஷம், துலாம், கடகம், மகரம் ஆகியவைகள் ஒன்றுக்கு, ஒன்று கேந்திரமாகும். இதில் செவ்வாயும், சந்திரனும் நண்பர்கள், சுக்கிரனும், சனியும் நண்பர்கள்.

  ஸ்திர ராசிகளான கும்பம், விருச்சிகம், சிம்மம், ரிஷபம் ஆகிய நான்கு கேந்திரத்தில், கேந்திராதிபதிகளான செவ்வாயும், சூரியனும் நண்பர்கள். சனியும், சுக்கிரனும் நண்பர்.

  உபரி ராசிகளான - தனுசு, மீனம், கன்னி, மிதுனம் ஆகிய நான்கு கேந்திரத்திற்கும் அதிபதிகளான புதனும், குருவும் நிரந்தர எதிரிகள். இவர்கள் தாம் பெற்ற இரு ஆதிபத்தியங்களுக்கு மட்டும் நன்மை செய்வார்கள்.

  இதன்படி,

  மேஷ லக்னத்திற்கு - 1, 4-ம் இடம் கெடுபலன் தரும்.

  7, 10 ம் இடம் சாதகமாய் அமையும்.

  ரிஷப லக்னம் - 1, 10-ம் இடம் சாதகம்.

  4, 7-ம் இடம் கெடுபலன்.

  மிதுன லக்னம் – 1, 4-ம் இடம் சாதகம்.

  7, 10-ம் இடம் பாதகம்.

  கடக லக்னம் - 1, 10-ம் இடம் சாதகம்.

  4, 7-ம் இடம் கெடுபலன்.

  சிம்ம லக்னம் – 1, 4-ம் இடம் சாதகம்.

  7, 10-ம் இடம் கெடுபலன்.

  கன்னி லக்னம் - 1, 10-ம் இடம் சாதகம்.

  4, 7-ம் இடம் பாதகம்.

  துலாம் லக்னம் - 1, 4-ம் இடம் சாதகம்.

  7, 10-ம் இடம் மத்திம பலன்.

  விருச்சிகம் லக்னம் - 1, 10-ம் இடம் சாதகம்.

  4, 7-ம் இடம் கெடுபலன்.

  தனுசு லக்னம் - 1, 4-ம் இடம் சாதகம்.

  7, 10-ம் இடம் பாதகம்.

  மகர லக்னம் - 1, 10-ம் இடம் சாதகம்.

  4, 7-ம் இடம் கெடுபலன்.

  கும்ப லக்னம் - 1, 4-ம் இடம் சாதகம்.

  7, 10-ம் இடம் முரண்பாடான பலன்.

  மீன லக்னம் - 1, 10-ம் இடம் சாதகம்.

  4, 7-ம் இடம் பாதகம்.

  பாதகம் கெடுபலன் என்பதெல்லாம் அந்த காரகங்களில் ஏற்படும் குறைபாடுகள் ஆகும். இது பொதுபலன், ஒவ்வொரு ஜாதகத்திலும், ஒவ்வொரு வகையில் பலன் நடைபெறும்.

  அனைத்து லக்னங்களுக்கும், லக்னாதிபதியானவர் அதீதமான பலம் பெற்றால், மற்ற கேந்திரங்களின் குறைபாட்டை அகற்றி (அல்லது) அவற்றை சமாளிக்கின்ற தகுதியை அளித்துவிடுவார்.

  பாஷிகள் கேந்திரத்திலும், சுபர்கள் கோணத்திலும் பலம் பெறுவார்கள் என்பது விதி.

  சுபர்களான சுக்கிரன், புதன், குரு, வளர் சந்திரன் நால்வரும் கேந்திராதிபதியாகி கேந்திரத்தில் நின்றால் கடுமையான தோஷத்திற்கு உள்ளாகி கெடுபலனையே அளிப்பார்கள்.

  சூரியன், செவ்வாய், சனி மூவரும், கேந்திராதிபதியாகி கேந்திரத்தில் நின்றால் மேலான யோகம் செய்வார்கள்.

  ராகு, கேது இருவரும், கேந்திரத்தில் கோணாதிபதியோடு நின்றால் மேலான யோகம் புரிவார்கள்.

  சூரியன், சந்திரன், ராகு, கேதுவைத் தவிர மற்ற சனி, புதன், சுக்கிரன், குரு, செவ்வாய், கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெற்று நின்றால் யோகங்களில் மேலான யோகமான பஞ்ச மகா புருஷ யோகம் உண்டாகும்.

  1. சனி, கேந்திரத்தில், ஆட்சி உச்சம் பெற்றால், சசி யோகம் ஏற்படும்.

  2. குரு, கேந்திரத்தில், ஆட்சி உச்சம் பெற்றால், ஹம்ச யோகம் ஏற்படும்.

  3. சுக்கிரன், கேந்திரத்தில், ஆட்சி உச்சம் பெற்றால், மாளவிகர் யோகம் ஏற்படும்.

  4. செவ்வாய், கேந்திரத்தில், ஆட்சி உச்சம் பெற்றால், ருசக யோகம் ஏற்படும்.

  5. புதன், கேந்திரத்தில், ஆட்சி உச்சம் பெற்றால், பத்ர யோகம் ஏற்படும்.

  இந்த யோகங்களின் பலன், அந்தஸ்து, மதிப்பு, மரியாதை மிக்க உயர் வாழ்வு, அரச பதவி, அரசியல் தொடர்பு, செல்வ செல்வாக்கு, ஜனவசியம் சிறந்த ஆற்றல் போன்ற அனைத்து மேலான உயர் வாழ்வையும் அடைவார்கள் என்பதாம்.

  இக்கிரகங்கள் கேந்திரத்தில், நட்பு பெற்றால் அரை பலனும். ஆட்சி பெற்றால் முக்கால் பலனும், உச்சம் பெற்றால் முழு பலனும் கிடைக்கும்.

  லக்ன ரீதியான பலன்

  கிரகங்கள் கேந்திரங்களில் நிற்கும்போது அதிக பலம் பெறுவர். கேந்திரங்களும், கேந்திராதிபதிகளும் பலம் பெற்றால், ஜாதகர் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும், உழைப்பாளியாகவும் இருப்பார்.

  கேந்திராதிபதிகள், தனித்து கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்றால், அந்தஸ்து, கௌரவம், உயர் வாழ்வு, அரச பதவி எல்லாம் தருவார்கள். ஆனால், அதை பெற ஜாதகர் அதிகம் போராட வேண்டியது வரும். ஆனால், கேந்திராதிபதி, கோணாதிபதியோடு இணைந்தால் செல்வம் கஷ்டமில்லாமல் வரும். விரைவில் உயர்நிலை பெறலாம்.

  1. லக்ன கேந்திராதிபதியான, லக்னாதிபதி, லக்னத்தில் ஆட்சி பெற்றால், மற்ற கேந்திரங்களில் நின்று வலுத்தால், யோகம் புரிவார். லக்ன வகை காரகம் அனைத்தும் ஸ்திரப்படும்.

  2. 4-ம் அதிபதியான, சுகஸ்தானாதிபதி வலுத்தால், சிறந்த கல்வி, தாய் ஆதரவு, பிறந்ததிலிருந்தே சுக சௌர்யம், வீடு, வாகன யோகம் போன்ற அனைத்தும் கிட்டும்.

  3. 7-ம் அதிபதியான, களத்திராதிபதி வலுத்தால், சிறந்த களத்திரம், கூட்டுத் தொழில் மேன்மை, மக்கள் சக்தியைப் பெறுதல், ஜனவசியம், சிறந்த ஆற்றல் எல்லாம் கிட்டும்.

  4. 10-ம் அதிபதியான, கர்மாதிபதி வலுத்தால், உயர் பதவி, அரச பதவி, சிறந்த தொழில் பலம், ஒழுக்கம், செல்வாக்கு, புகழ், ஸ்திரமான தொழில் அனைத்தும் ஏற்படும்.

  நான்கு கேந்திரங்களும் வலுப்பெற்ற ஜாதகங்கள் வாழ்க்கையை ஏற்ற இறக்கமின்றி அனுபவிப்பர்.

  2-ம் பாவத்தின் கேந்திரங்களான, 2, 5, 8, 11-ம் அதிபதிகள் வலுத்தால், சிறந்த தன யோகம் ஏற்படும்.

  2-ம் அதிபதி வலுத்தால் தனம் தடையில்லாமல் வரும்.

  5-ம் அதிபதி வலுத்தால், பூர்வீகத் தனம், பிறர் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல் போன்ற இனங்கள் வாயிலாக பணம் வரும்.

  8-ம் அதிபதி வலுத்தால், மறைமுக வழி தனம் வரும் பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாவர். Trust சொத்து பராமரிப்பர்.

  11-ம் அதிபதி வலுத்தால், தாம் சார்ந்த அனைத்து நிலைகளிலும் லாபம் சேரும். மூத்த சகோதரத்தாலும், குடும்பத்தினராலும், பூர்வீக தனத்தாலும் லாபம் வந்து சேரும்.

  3-ம் பாவத்தின் கேந்திரங்களான, 3, 6, 9, 12-ம் பாவங்கள் வலுத்தால், தைரிய வீர்யம், எதிரிகளிடம் வெற்றி, கடன், நிவாரணம், சுப விரையம், பல அசையா சொத்து பெறும் நிலை, பிறர்க்கு செய்யும் தான தர்மங்கள், இறப்பு நிலையும் சுபமாய் அமையும்.

  மொத்தத்தில், 1, 4, 7, 10 வலுத்தால், ஆற்றல் கூடும். 2, 5, 8, 11 வலுத்தால், ஆற்றல், சிறந்த தன யோகம் பெறும் நிலை உருவாகும்.

  3, 6, 9, 12 வலுத்தால், பெற்ற தனத்தை ஜாதகர் நன்முறையில் பயன்படுத்தி வாழ்க்கை வசதிகளை ஸ்திரப்படுத்திக் கொள்வர்.

  1. லக்னாதிபதி திசை யோகமே செய்யும்.

  2. 4-ம் அதிபதி திசை சில விபத்துக்கள், தாயினால் நன்மை, வீடு, வாகன ப்ராப்தி. குழந்தைகளினால் பிரச்சனை தரும்.

  3. 7-ம் அதிபதி திசை பலமிழந்தால், மாரகத்தையும் பலம் பெற்றால், யோகம் தந்து மாரகத்தையும் தரும்.

  4. 10-ம் அதிபதியின் திசை யோகமே புரியும். 10-ம் இடத்தில் யார் நின்று திசை நடத்தினாலும் மேலான யோகமே செய்யும்.

  5. தம்முடைய வீடுகளுக்கு கேந்திரத்தில் உச்சம் பெறும் செவ்வாயும், சனியும், உயர்ந்த அந்தஸ்து, அதிகாரமிக்க வாழ்வு, தைரியம், புத்திகூர்மை, தொழில் மேன்மையையும் தருவார்கள்.

  தம்முடைய வீடுகளுக்கு கேந்திரங்களிலே நீசமும் அடையும் இவர்கள் ஒழுக்க குறைபாடு, சட்ட விரோத செயல்கள், சிறை செல்லுதல் போன்ற கெடுபலன் தருவார்கள்.

  6. லக்ன கேந்திரத்தில், நிற்கும் புதனும், சுக்கிரனும் குருவும் ஜாதகத்தில் உள்ள மற்ற தோஷங்களை போக்கி, ஆயுள் விருத்தியை தருவார்கள்.

  (இவர்கள் வர்க்கங்களிலும் பலம் பெறுவது அவசியம்).

  7. நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இல்லாத நிலையை பெற்ற ஜாதகர் ஆற்றல் இல்லாதவராய் இருப்பார்கள். ஏதாவது 2 கேந்திரங்களிலாவது கிரகம் நிற்க வேண்டும். முக்கியமாய் 10-ல் ஒரு பாவியாவது நிற்க வேண்டும் என்பது விதி.

  8. நான்கு கேந்திரங்களிலுமே ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் நின்றால் அந்த ஜாதகர் உலகம் போற்றும் அரசராக இருப்பார்.

  9. 1, 4, 7, 10 அதிபதிகளும், 2, 5, 8, 11 அதிபதிகளும், 3, 6, 9, 12 அதிபதிகளும் ஒருவர்க்கொருவர் சம்பந்தம் படும்போதுதான் யோகம் பெருகும்.

  10. 4-ல் சுக்கிரனும், சந்திரனும், 7-ல் சனியும், 10-ல் சூரியனும், செவ்வாயும், 1-ல், குருவும், புதனும் நின்று பலம் பெற்றால், திக் பலம் அடைவார்கள். சுப பலன் விருத்தியாகும்.

  11. கேந்திராதிபத்யம் பெற்ற சந்திரன் குரு, சந்திரனை விட குறைவாகவே அசுப பலனைச் செய்வார்.

  கேந்திராதிபத்யம் பெற்ற புதன், சந்திரனை விட குறைவான அசுப பலன் செய்வார். கேந்திராதிபத்யம் பெற்ற குரு, சுக்கிரன் மிக தீய பலனைச் செய்வார்கள்.

  12. சுபர்களும், லக்னாதிபதியும் கேந்திரத்தில் நின்றால் பூரணாயுள் ஏற்படும். பணபர வீடுகளில் நின்றால் மத்திமாயுள் ஏற்படும். அபோக்லியத்தில் நின்றால் அற்பாயுள் உண்டாகும்.

  13. சுபர்களோ, பாவிகளோ கேந்திராதிபதிகளானால் அதீதமான பலம் பெறுவார்கள். இதனால், தம்முடைய ஸ்தான, ஆதிபத்ய, காரக, சார வகையில் தாம் பெற்ற பலத்திற்கேற்ற சுப அல்லது அசுப பலனை முழுமையாக தம் திசையில் தந்து செல்வார்கள்.

  உதாரணம் - 1

  ராமர் ஜாதகம்

  ராமபிரான் ஜாதகத்தில், 4 கேந்திரங்களிலும் உச்சம் பெற்ற கிரகங்கள் நின்றதாலே, தெய்வமே மனித அவதாரம் பெற்ற ஜாதகமாக விளங்குகிறது. யுகங்கள் கடந்தும் அவர் புகழை பாடுகிறோம். 4 கேந்திரங்களிலும் உச்சம் பெற்ற கிரகம் அரச கேந்திர யோகம் பெற்ற ஜாதகமாகும்.

  ஆண்டவனின் அருள் பூரணமாய் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவனை வணங்குகிறேன்.

  கோணாதிபதிகள்

  1, 5, 9-ம் இடங்களே கோணங்கள்; இவ்வதிபதிகளே கோணாதிபதிகள், வாழும்போது நாம் அனுபவிக்கும் அனைத்து யோகங்களையும் தருபவர்கள் கோணாதிபதிகளே!

  காலபுருஷ தத்துவப்படி,

  மூன்று நெருப்பு ராசிகளான,

  மேஷம், சிம்மம், தனுசு மூன்றும் ஒரு கோணம். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் ஒருகோணம். நில ராசியான ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் ஒரு கோணம்.

  ஒவ்வொரு லக்னத்திற்கும், கோணாதிபதிகள் தங்களுக்குள் ஒருவர்க்கொருவர் எதிரித்துவம் பெறுவதில்லை.

  கிரகங்களின் நட்பும் கோணாதிபத்யமும், எங்கும் நிறைந்த இறைவன் மட்டுமே ஏக சொரூபன். பாகுபாடு இல்லாதவன். பாகுபடுத்த முடியாதவன் அம்மையப்பனாய் உள்ளவன். அவனைத் தவிர அவனால் படைக்கப்பட்ட உயிர்ப் பொருளும், உயிர் அல்லாத ஜடப் பொருளும் (நல்லது, கெட்டது), (பெரியது, சிறியது), (உள்ளும், புறமும்) என்று அனைத்திற்குமே இரு வேறு இயல்புகள் உள்ளன.

  ஆண்டவனால், உலகை கட்டுப்பாட்டுக்குள் வைக்க படைக்கப்பட்ட நவகிரகங்கள் தம் இயல்புக்கும், சுபாவத்திற்கும், ஒத்த கிரகங்களாக சேர்ந்து நட்பு கொண்டுள்ளன. இந்த இரு பெரும் சக்திகளே நம்மை இயக்கி வருகின்றன.

  நவ கிரகங்களில் ராகு, கேது இருவரும் நாம் வாழும் பூமியின் இரு துருவங்களாக கருதப்படுவதால் பூமிக்குள்ள புவியீர்ப்பு விசை ராகு, கேதுவிற்கும் உண்டு. தாம் சம்பந்தப்படும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் திறன் ராகு, கேதுவிற்கும் உள்ளதால், யோக காரகர்கள் கேந்திர கோணாதிபதிகளோடு சேர்ந்து, கேந்திர கோணங்களில் நின்றாலும், 3, 6, 11-ல் நின்றாலும் யோகம் செய்வார்கள். பாவிகளுடன் 6, 8, 12ம் அதிபதிகளுடன் இணைந்து 6, 8, 12-ம் இடங்களில் இருந்தால் விபரீத யோகம் புரிவார்கள். ஆனால் இதில், மாற்றமாக கேந்திர, கோணாதிபதிகளோடு இனைந்து 6, 8, 12-ல் நின்றாலோ, விளைவு விபரீதம்தான்.

  ஆக,

  வீர்ய பாம்பைப் பற்றி விளங்கவே யோகம் சொல்வாய்

  என்ற விதிப்படி, ராகு - கேது இருவரும், கோணாதிபதிகளின் சம்பந்தம் பெற்று கேந்திரங்களில் நின்றால் மேலான ராஜயோகம் கிட்டும். மீதமுள்ள 7 கிரகங்களில், சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, ஆகிய நால்வரும் நண்பர்கள்.

  சுக்கிரன், சனி, புதன் ஆகிய மூவரும் நண்பர்கள்.

  ஒவ்வொரு கிரகமும் தான் லக்னாதிபதியாய் வரும்போது, தம் நண்பர்களுக்கே மற்ற (5, 9) கோணாதிபத்யத்தை கொடுக்கிறது.

  1. சுக்கிரன் லக்னாதிபதியானால், சனியும், புதனும் 5, 9-ம் அதிபதிகள்.

  2. சனி லக்னாதிபதியானால், சுக்கிரனும், புதனும், 5, 9-ம் அதிபதிகள்.

  3. புதன் லக்னாதிபதியானால், சுக்கிரனும், சனியும் 5, 9-ம் அதிபதிகள்.

  இதில், எதிர்கட்சி உறவினர்கள் ஆன சூரியன், சந்திரன், குரு, செவ்வாய்க்கு ஒரு சீட் கூட கொடுக்கப்படுவதில்லை.

  4. சூரியன், லக்னாதிபதியானால், குருவும், செவ்வாயும் 5, 9-ம் அதிபதிகள்.

  5. சந்திரன் லக்னாதிபதியானால், குருவும், செவ்வாயும் 5, 9-ம் அதிபதிகள்.

  6. செவ்வாய் லக்னாதிபதியானால், சூரியனும், சந்திரனும், குருவும் 5, 9-ம் அதிபதிகள்.

  7. குரு லக்னாதிபதியானால் சூரியன், சந்திரன், செவ்வாய் 5, 9-ம் அதிபதிகளாய் வந்து யோகம் தருவார்கள். பலமுடன் அமையும் இவர்கள் தரும் யோகம் பெரிதாகவும், எளிமையான வழியிலும் இருக்கும். கோணாதிபதிகள் சுப பலம் பெற்றுவிட்டால், செல்வ செல்வாக்கிற்கு என்றும் குறையிருக்காது.

  ராஜ கிரகங்கள்

  சூரியன், குரு, செவ்வாய், சந்திரன் நால்வரும் ராஜ கிரகங்கள். இவர்கள் லக்னாதிபதியாகவோ, கோணாதிபதியாகவோ வந்தால், ஆன்மீகம், அரசியல், நிதி, நீதி, மதம், ஆசிரியர், மந்திரி, அரச பதவி என்று நாட்டைக் காக்கும் ராணுவம், போலீஸ், விமானப் படை, கப்பல் படை போன்ற அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால், உங்கள் தொழில் செயல்பாடுகள், இக்காரகங்களை ஒட்டியே அமையும். அதன் வழி மேன்மையும் உண்டாகும்.

  வியாபார கிரகங்கள்

  சனி, புதன், சுக்கிரன், வியாபார கிரகங்கள். அனைத்து பொருள் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, கலை, ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், பத்திரிகை அனைத்து கனிமப் பொருள் உற்பத்தி/விற்பனை, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவைகள் மற்றும் அனைவரும் உபயோகிக்கும் அனைத்து பொருட்களின் உற்பத்தி, விற்பனை, விவசாயம் அனைத்தும் மொத்த குத்தகைக்கு எடுத்தவர்கள் சனி, புதன், சுக்கிரன் மட்டுமே. இவரில் ஒருவர் 1, 5, 9-ம் அதிபதியாய் வந்தால் உங்கள் செயல்பாடுகள் இவை ஒட்டியே இருக்கும்.

  கோணாதிபதிகளின் திசா பலன்கள்

  ஒரு ஜாதகரின் வாழ்நாளில், 1, 5, 9-ம் அதிபதிகளின் திசை வரப் பெற வேண்டும். இத்திசைகள் 30 முதல் 60 வயதிற்குள் வந்தால் அனைத்து வசதிகளையும் யோகங்களையும் பெறமுடியும்.

  யோகாதிபதிகளான கோணாதிபதிகள், எத்தனை பலம் குறைந்திருந்தாலும், கெடுபலனை அதிகம் விளைவிக்க மாட்டார். ஜாதகர் தற்போது இருக்கும் வசதியை விட உயர்ந்த நிலையையே தருவார்.

  கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர் பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி என்று ராகு, குரு, சூரியன், சந்திரன் என்ற 4 கிரக நட்சத்திரங்களில் சூரியன், சந்திரன் நட்சத்திரங்களில் பிறந்து, ராஜ கிரக தனங்களாக அமைந்தால், இளமையில் இருந்தே யோக திசையை அனுபவிக்க முடியும்.

  மேற்கூறிய நட்சத்திரங்களில், குரு, ராகு, நட்சத்திரங்களில் பிறந்து, வியாபார கிரக லக்னங்களில் பிறந்தால், மத்திம வயதிற்கு மேல் யோக திசைகள் வருவதால் தம் சுய உழைப்பால் முன்னேறி செல்வம் சேர்ப்பர்.

  இந்த நட்சத்திரங்களில் பிறந்தால், இந்த நட்சத்திரங்களின் மொத்த திசா காலம் 63 ஆண்டுகள் ஆகையால், இதில் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், வியாபார லக்னங்களில் பிறந்துவிட்டால் யோகமே! கேது சாரத்தில் பிறந்து, ராஜ கிரக லக்னம் அமையப் பெற்றவர்கள்…, மத்திம வயதிற்குமேல் யோகம் பெறுவர்.

  குறிப்பு:

  (கோணாதிபதிகளான 1, 5, 9-ம் அதிபதிகள் தவிர மற்ற கிரகங்கள் யோகம் செய்ய மாட்டார்களா? என்றால், மற்ற திசை நடைமுறைப்படும்போது, அக்கிரக பலத்திற்கு ஏற்ப சுப, அசுப பலன் நடக்கும்.

  அதையும் மீறி ஓர் உயர் வாழ்வு, அந்தஸ்து, தடையில்லாத தன வரவு, சுப காரியங்கள் போன்ற அனைத்தும் கோணாதிபதிகளே அதிகம் தருவார்கள். கோணாதிபதிகள் ஓரளவு பலம் பெற்றால் கூட தம் ஆதிபத்ய சிறப்பினால், நற்பலனை அதிகமாய் தருவார்கள்).

  கோணாதிபதிகள் தரும் சுப, அசுப பலன்

  1. ஸ்திர லக்னங்களான சிம்மம், ரிஷபம், விருச்சிகம், கும்பம் ஆகியவற்றிற்கு 9-ம் இடம் பாதக ஸ்தானமாவதால் 9-ம் இடத்தில், லக்னாதிபதியோ (அல்லது) 9-ம் அதிபதியோ நின்று திசை நடந்தால் சில கெடுபலன்களும் நடைபெறும்.

  2. பாவிகள், கேந்திரத்திலும், சுபர் கோணத்திலும் நின்றால், சுப பலன்களை செய்வார்கள் என்பது விதி. கோணாதிபதியாய் வரும் சூரியன், சனி, செவ்வாய் மூவரும் கோணத்தில் நின்றாலோ சில கெடுபலன்கள் செய்வார்கள். கோணாதிபத்யம் பெற்று கேந்திரத்திலும் 3, 6, 11-ம் இடத்திலும் நின்றால் மேலான ராஜயோகம் செய்வார்கள். கோணாதிபதியாய் வரும் சுபர்கள், 6, 8, 12-ம் இடம் தவிர்த்து எங்கிருந்தாலும் யோகம் முழுமையாய் செய்வார்கள்.

  3. கோணாதிபதிகள், ஒருவர்க்கொருவர் கோணங்களில் நின்றால் யோகம் வலுக்கும்.

  4. லக்னாதிபதி, லக்னத்தையும், 5-ம் அதிபதி 5-ம் இடத்தையும், 9-ம் அதிபதி 9-ம் இடத்தையும், பார்ப்பது யோகம் கூடும்.

  5. கேந்திரம் + கோணம் = ராஜயோகம்

  இதன் அடிப்படையில் (லக்னாதிபதி + 7-ம் அதிபதி) (4 + 5-ம் அதிபதி) (9 + 10-ம் அதிபதி) (5 + 10-ம் அதிபதி) சேர்க்கை, கேந்திர கோணங்களில் சுப பலத்துடன் அமைந்தால் ராஜ யோகம் செய்யும்.

  6. 5, 7-ம் அதிபதிகள் 9-ல் நின்றால் அயல்நாட்டு வாசம் அமையும். காதல் கைகூடும்.

  7. சுக்கிரனும், சந்திரனும் தம் சொந்த வீட்டுக்கு, (ரிஷபம், கடகம்) 5-ம் இடத்தில், நீசம் பெறுகின்றன. இரண்டும் பெண் கிரகங்கள். நீர் கிரகங்கள். காதலையும், காமத்தையும் குறிப்பவர்கள்.

  கால புருஷ தத்துவப்படி, சுகத்தையும், களத்திரம் குடும்பத்தையும் குறிப்பவர்கள். இவர்கள் கோணாதிபத்யம் பெற்று நீசம் பெற்றால், செல்வம் சேரும். ஆனால், நோய் கடுமையாகும். அவப்பெயர் கிட்டும்.

  செவ்வாய் தன் வீட்டிற்கு 9-ல் நீசம் அடைவார். (விருச்சிகம்) தன் வீட்டுக்கு கோணத்தில் நீசம் பெறும். சுக்கிரன், சந்திரன், செவ்வாய் மூவரும், பொதுவாய், எந்த அதிபதியானாலும், எந்த இடத்தில் ஒன்று சேர்ந்தாலும் ஜாதகர் பெண் வழி பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்.

  ரத்த வகை நோய் வரும். முறையற்ற உறவு, முறையற்ற திருமணம் நடக்கும். குரு பார்வை சம்பந்தம் இருந்தால் தீமை இல்லை. பலவீனமானால் கெடுபலன் தரும்.

  8. தன் சொந்த வீட்டுக்கு, கோணத்தில், உச்சம் பெறும் கிரகங்கள் குரு, சூரியன் (மீனம், சிம்மம்). தந்தை காரகன் சூரியன் கோணாதிபதியாய் உச்சம் பெற்றால், ஒன்றை கெடுத்து, ஒன்றைத் தருவார். (முக்கியமாய் தந்தை காரகம் கெடும்)

  குரு கோணாதிபதியாய், கோணத்தில் உச்சம் அடையும்போது யோகம் அதிகமாகும்.

  9. திசா நாதன் நின்ற ஸ்தானத்திற்கு, 5, 9-ல் நிற்கும் கிரகத்தின் புத்தி காலம் யோகமே செய்யும்.

  10. லக்னாதிபதிக்கு, 5, 9 அதிபதிகள் யோகம் செய்வார்கள். அதேபோல் 2-ம் இடம், இதன் 5-ம் இடமான 6-ம் அதன் அதிபதியும், 2ன், 9, 10-ம் இடமாகும். ஆக, 2, 6, 10-ம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது சிறந்த தனயோகமாகும்.

  3, 7, 11-ம் இடம் காம திரிகோணமாகும். இதன் சேர்க்கை அதிகமான போக சுகத்தை கொடுக்கும். பொது ஜன தொடர்புடைய ஆதரவும், ஜனசக்தியும் கூடும்.

  4, 8, 12 அதிபதிகள் இணைவது சில விபரீத யோகங்கள், புதையல் போன்றவை தரும். மறைமுக வழி தனம் தரும். தாயின் நலம் கெடும். சுகமான நித்திரை செய்வார்கள். திடீர் வாகன விபத்துக்களில் அடிக்கடி சிக்கிக் கொள்வர்.

  உதாரணம்:

  உலக அழகி சுஷ்மிதா சென்

  கார்த்திகை நட்சத்திரம். செவ்வாயின் லக்னமான விருச்சிகத்தில் பிறந்து கோணாதிபதிகளின் திசை அடுத்து அடுத்து வரப் பெற்றிருக்கும் ஜாதகம்.

  1. லக்னாதிபதி 6க்குடையவராய் 8-ல் நின்றாலும், 5-ம் அதிபதி 5-ல் ஆட்சி.

  2. 9-ம் அதிபதி சந்திரன் 7-ல் உச்சம்.

  இளமையிலேயே தம் அழகால் செல்வமும், புகழும் பெற்றவர். 1, 7 ஆக சூரியன், சந்திரன் நின்று முழுமையான

  Enjoying the preview?
  Page 1 of 1